ஒரு விஷயம் நடந்தால் அது நல்லவையாக இருக்கலாம் கெட்டவையாக இருக்கலாம். அந்த நேரத்தில் நம் மூளை இரண்டு விதமாக சிந்திக்கும். ஒன்று அதீத பாசிட்டிவாக சிந்திக்கும். இல்லையென்றால் மிகவும் நெகட்டிவ் ஆக சிந்திக்கும். யார் தங்களுடைய மனதை கட்டுப்பாடோடு வைத்திருக்கிறார்களோ நல்ல உறுதியான மனப்பான்மை கொண்டிருக்கிறார்களோ அவர்கள் எந்த ஒரு பிரச்சனை என்றாலும் பாசிட்டிவாக எதிர்கொள்வார்கள். மிகவும் இளகின மனசுக்காரர்கள் எப்போதுமே நெகட்டிவ் சிந்தனைகளை கொண்டிருப்பவர்கள் அதிகமாக சிந்திப்பவர்களுக்கும் நெகட்டிவ் சிந்தனைகள் என்பது மேலோங்கி இருக்கும். இப்படி உங்களது வாழ்க்கையில் அதிகமாக நெகட்டிவ் எண்ணங்கள் வந்தால் அதை எதிர்கொள்ள ஒரு சில வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அதைப் பற்றி இனி காண்போம்.
உங்களுக்கு அதிகமாக நெகட்டிவ் எண்ணங்கள் வந்தால் உங்கள் வாழ்வில் நடந்த பாசிட்டிவ்வான ஒரு சில விஷயங்களையும் நீங்கள் ஒரு சில விஷயங்களை பாசிட்டிவாக எதிர் கொண்டதையும் நினைத்துப் பாருங்கள். என்னால் எல்லாம் செய்ய இயலும் என்னால் செய்ய முடியாதது எதுவும் இல்லை என்று உங்களுக்குள்ளே நீங்கள் சொல்லிக் கொள்ளுங்கள். அப்போது உங்களுக்குள் ஒரு பாசிட்டிவ் எண்ணம் வரும்.
தினமும் ஒரு பத்து நிமிடம் அமைதியான இடத்தில் அமர்ந்து தியானம் செய்யுங்கள். என்னால் எதுவும் முடியும் நான் எல்லாவற்றையும் பாசிட்டிவாக எதிர்கொள்வேன் நெகட்டிவ் ஆக யோசித்து என்னை நானே கீழே இறக்கிக் கொள்ள மாட்டேன் என்று உங்களுக்குள்ளே நீங்கள் கூறி தினமும் தியானம் செய்யும்போது உங்கள் மனதும் மூளையும் அதற்காக தயாராகி விடும். பாசிட்டிவான விஷயங்களையே நினைக்க நீங்கள் தொடங்குவீர்கள்.
ஏற்கனவே நீங்கள் நெகட்டிவாக சிந்திப்பவர்களாக இருந்தால் உங்களை சுற்றி உங்களை கீழே இறக்கி விடும் அளவுக்கு எப்போதும் நெகட்டிவ்வானவே பேசிக் கொண்டிருப்பவர்களிடமிருந்து விலகியிருங்கள். அவர்களிடம் அதிகமாக பழகுவதை தவிர்த்து விடுங்கள். யார் உங்களை என்கரேஜ் செய்கிறார்களோ பாசிட்டிவாக தட்டிக் கொடுக்கிறார்களோ அவர்களிடம் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளும்போது நீங்களும் பாசிட்டிவ் ஆகவே சிந்திப்பீர்கள்.
எந்த ஒரு விஷயமானாலும் எதுமே நம் கையில் தான் இருக்கிறது. நம்மை மீறி எதுவும் நடக்கப்போவதில்லை என்னால் ஒரு பிரச்சனையை சமாளிக்க இயலும் நெகட்டிவாக சிந்திப்பதற்கு என்ன காரணம் எதற்காக நாம் அப்படி சிந்திக்கிறோம் என்று உங்களுக்குள்ளே நீங்கள் கேள்வி கேட்கும் போது பலவித விடைகள் உங்களுக்கு கிடைக்கும். இது போன்ற வழிகளை பின்பற்றும்போது உங்களது நெகட்டிவ் எண்ணங்களை அழித்து பாசிட்டிவான எண்ணங்களை வளர்க்க முடியும்.