கைதான யூடியூபர் ஜோதி, நவாஸ் ஷெரீப் மகளின் தோழியா? நீச்சல் குளத்தில் படு கிளாமர் புகைப்படங்கள்..!

  ஹரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, பாகிஸ்தானுக்காக உளவு செய்ததாகவும், அந்நாட்டு ஏஜென்டுகளுக்கு ரகசிய மற்றும் முக்கிய தகவல்களை பகிர்ந்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் முன்னாள்…

jothi1

 

ஹரியானாவை சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, பாகிஸ்தானுக்காக உளவு செய்ததாகவும், அந்நாட்டு ஏஜென்டுகளுக்கு ரகசிய மற்றும் முக்கிய தகவல்களை பகிர்ந்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மகளின் தோழி என்று கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜோதி ராணி என்ற பெயரிலும் அறியப்படும் அவர், ‘Travel with Jo’ என்ற யூடியூப் சேனலை இயக்கி வந்தார். இந்த சேனலுக்கு மூன்று லட்சத்திற்கும் அதிகமான சந்தாதாரர்களும், இன்ஸ்டாகிராமில் 1.32 லட்சம் பின்தொடர்பவர்களும் உள்ளனர். சமீபத்தில், அவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் பாகிஸ்தான் சென்றதின் சில காட்சிகளை பகிர்ந்திருந்தார்.

33 வயதான ஜோதி, ஹரியானாவின் ஹிசார் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானிய ஏஜென்டுகளுடன் முக்கிய தகவல்களை பகிர்ந்ததாகவும், உளவுசார் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும், அவருடன் மேலும் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது ஜோதி ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் அனுப்பப்பட்டுள்ளார். தற்போது இந்த வழக்கை பொருளாதார குற்றப்பிரிவு விசாரிக்கிறது.

ஹிசார் சிவில் லைன்ஸ் போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டர் சஞ்சய் பதிவு செய்த எஃப்ஐஆர் படி, ஜோதி மல்ஹோத்ரா 2023-ல் பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றிய எஹ்சான்-உர்-ரஹீம் என்ற டானிஷ் என்பவரை சந்தித்திருந்தார். அவர் பின்னர் ஜோதி பாகிஸ்தானின் உளவுத்துறையினருடன் தொடர்பில் இருந்துள்ளதாகவும் தெரிகிறது.

ஜோதி, 2023-ல் இரண்டு முறை ஜோதி பாகிஸ்தான் சென்றுள்ளார். அப்போது அலி எஹ்வான், ஷாகிர், ராணா ஷஹ்பாஸ் என அடையாளம் காணப்பட்ட நபர்களை சந்தித்துள்ளார். அவர்களின் பெயர்களை “ஜட் ரந்தாவா” போன்ற பொய் பெயர்களில் சேமித்து, கண்காணிப்பை தவிர்த்துள்ளார். மேலும், இந்தோனேசியாவின் பாலிக்கு ஒரு உளவுப்பணியாளருடன் பயணித்ததும் குறிப்பிடப்படுகிறது. இது ஆன்லைன் தொடர்புகளைக் கடந்து, நேரடி செயல்பாடுகளும் இருந்ததை காட்டுகிறது.

மேலும் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் அவர்களின் மகளுடன் ஜோதி உரையாடும் வீடியோவும் தற்போது இணையத்தில் பரவிவருகிறது. எனவே இவர் நவாஸ் ஷெரீப் மகளின் தோழியாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

ஜோதி, தனது யூடியூப் சேனலை பாகிஸ்தானின் நேர்மறை முகத்தை காட்ட பயன்படுத்தி, ஒருங்கிணைந்த ப்ரோபகண்டா முயற்சியில் ஈடுபட்டதாகவும், குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். அவர் சமீபத்தில் காஷ்மீருக்கும் குறிப்பாக பஹல்காம் பகுதிக்கும் பயணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராமில் நீச்சல் குளத்தில் இருக்கும் கிளாமருடன் கூடிய பிகினி உடையுடன் சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.