காதல் என வந்து விட்டாலே காதலன் மற்றும் காதலி ஆகியோருக்கிடையே எப்போதும் அன்பும், ரொமான்ஸ் மட்டுமே இருந்து கொண்டிருக்காது. சில நேரங்களில் எதிர்பாராத ஏதாவது ஒரு பிரச்சனைகள் பெரிதாக வெடித்து அவர்களுக்கு மத்தியில் கோபத்தையும், சண்டையும் கூட ஏற்படுத்தும்.
.
இதன் பெயரில் பல நாட்களாக அல்லது பல மாதங்களாக கூட பேசாமல் இருக்கும் காதலர்களும் இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் தாங்கள் உயிருக்கு உயிராக காதலித்த நபர் இப்படி செய்கிறார் என்ற கோபத்தில் ஏதாவது பழிவாங்கும் எண்ணத்துடன் சில நேரம் செய்யும் விஷயங்கள் மிகப்பெரிய அளவில் பரபரப்பையும் ஏற்படுத்தும்.
அப்படி ஒரு சூழலில் தான் பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் தனது காதலனை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் செய்த விஷயம் ஒட்டுமொத்த இந்தியாவையே அலற வைத்துள்ளது. பெங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் தான் இந்திரா ராஜ்வர். இவர் வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் பெங்களூரில் இருந்து மும்பைக்கு விமானத்தில் செல்வதாக திட்டம் போட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அப்படி ஒரு சூழலில், இவர்களுக்குள்ளே ஏதோ சண்டை இருந்து வந்ததால் இருவரும் தனி தனி விமானத்தில் டிக்கெட் புக் செய்து மும்பை போக திட்டம் போட்டதாகவும் கூறப்படுகிறது. அப்படி ஒரு சூழலில் இருவரும் விமான நிலையத்தில் ஒன்றாக அமர்ந்து இருக்கும் போதும் இவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு உருவானதாக கூறப்படுகிறது.
அந்த சமயத்தில் தான் தனது காதலனை பழிவாங்க வேண்டும் என நினைத்த இந்திரா ராஜ்வர், உடனடியாக பெங்களூர் விமான நிலையத்திலிருந்த அதிகாரிகளுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது காதலனின் பெயரை குறிப்பிட்டு அவரது பேகில் வெடி குண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் அங்கிருந்த அதிகாரிகளும் பயந்து அலறி போக உடனடியாக இந்திராவின் காதலரின் பைகளில் சோதனை செய்துள்ளனர். அதில் எந்த வெடிகுண்டும் தென்படாத சூழலில் அந்த கால் வதந்தி என்பதும் தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அழைத்தது யார் என்பதை பற்றி போலீசார் சோதனை செய்ய அப்போது தான் அந்த பெண் இந்திரா ராஜ்வர் என்பதும் தெரிய வந்துள்ளது.
மேலும், அவருக்கும் காதலனுக்கும் இடையே பிரச்சனை இருப்பதும் அதற்காக பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் இதனை செய்ததும் தெரிய வந்துள்ளது. காதலனை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கில் ஒட்டுமொத்த விமான நிலையத்தையே வதந்தியான ஒரு தொலைபேசி அழைப்பால் பெண் ஒருவரால் அலற வைத்துள்ளது தற்போது இந்தியாவில் உள்ள பலர் மத்தியிலும் பெரிய அளவில் பேசு பொருளாக மாறி உள்ளது.