ரவுடிகளுக்குப் புரியும் மொழியில் நடவடிக்கை.. புதிய சென்னை கமிஷ்னர் அதிரடி

சென்னை : தமிழகத்தில் சட்டம்ஒழுங்கு கட்டுக்குள் இல்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன. மேலும் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் எதிரொலியாக…

Arun IPS

சென்னை : தமிழகத்தில் சட்டம்ஒழுங்கு கட்டுக்குள் இல்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தன. மேலும் சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் எதிரொலியாக உள்துறை செயலாளர் அமுதா ஐஏஎஸ் தமிழகத்தில் காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அந்த வகையில் சென்னை மாநகர கமிஷ்னராக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக இருந்த அருண் ஐபிஎஸ் சென்னை மாநகர கமிஷ்னராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை எவ்வளவு செலவு செய்தார் தெரியுமா? வெளியான விவரம்

மேலும் சந்தீப் ராய் ரத்தோர் தமிழக காவல்துறை பயிற்சி கல்லூரி இயக்குநராக பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதிய சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் பொறுப்பேற்றிருக்கிறார். புதிதாகப் பொறுப்பேற்ற சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் செய்தியாளர்களிடம் பேசுகையில், “சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பது, குற்றங்கள் நடக்காமல் தடுப்பது, நடந்த குற்றங்களைக் கண்டறிவது, ரவுடியிசத்தை ஒடுக்குவது ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

மேலும் சென்னை மாநகரம் எனக்குப் புதிதல்ல. ரவுடிகளுக்குப் புரியும் மொழியில் நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மாநகர போக்குவரத்தில் உள்ள சிக்கல்கள் களையப்படும். போலீஸ் அதிகாரிகள் Professional Policing, Regular Policing முறைகளைப் பின்பற்றினாலே குற்றங்கள் தடுக்கலாம்.” என பேட்டியளித்தார்.