பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம், பாகிஸ்தான் பயங்கரவாத ஆதரவின் மறைக்க முடியாத சாட்சியாக மாறியுள்ளது. இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் நேரடி பங்கேற்பை இந்தியா உலகிற்கு தெளிவாக நிரூபித்துள்ளது.
கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் பாஸ்போர்ட், பாகிஸ்தானில் நடந்த வழக்குகள், முசாஃபராபாத் மற்றும் கராச்சியில் உள்ள பாதுகாப்புக் குடில்களின் டிஜிட்டல் தடங்கள், மற்றும் பார்வை சான்றுகள் ஆகியவை இதற்கு ஆதாரமாக உள்ளன. இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என்பதை இந்தியா, வெளிச்சத்திற்ஜ்கு கொண்டு வந்து, இதோ ஆதாரங்கள் என உலகிற்கு அறிவித்துள்ளது.
பஹல்காம் படுகொலை சம்பவத்தில் பாகிஸ்தானின் இரட்டை வேடத்தை உலகிற்கு இந்தியா வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இதனால் திடீரென, பாகிஸ்தான் மீது உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ளது. இந்தியாவின் மீது ஆதரவு பெருகி வரும் நிலையில், பல்வேறு நாடுகள் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகின்றன.
ஒரு பக்கம் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், இந்தியா தற்காலிகமாகவும் உறுதியுடனும் தாக்குதலுக்கு பொறுப்பானவர்களை பிடித்து தண்டிக்க முயற்சிக்கிறது. இன்னொரு பக்கம் பாகிஸ்தான் உலக நாடுகள் மத்தியில் மேலும் தனிமைப்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளது. சீனா மற்றும் அரபு நாடுகள் கூட பாகிஸ்தானுக்கு ஆதரவாக குரல் கொடுக்கவில்லை.
உலக நாடுகளுக்கு இந்த தாக்குதல் குறித்து இந்தியா கொடுத்த ஆதாரங்கள்:
தாக்கியவர்கள் “தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்” (TRF) இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.
TRF முதலில் பொறுப்பேற்றது; பின்னர் திரும்ப பெற்றது.
பாகிஸ்தானில் உள்ள பாதுகாப்புக் குடில்களில் இருந்து டிஜிட்டல் தடங்கள்.
குலாம் சபீர், ஜஹீர் அகமது அப்பாசி, சனம் ஜாஃபர் ஆகியோரின் பாகிஸ்தான் அடையாள அட்டைகள் மீட்கப்பட்டன.
குலாம் சபீர் — பாகிஸ்தானின் SSG ஆயுதம் பயன்படுத்தியதற்கான ஆதாரம்.
ஜஹீர் அபாசி — பாகிஸ்தான் சிறையில் இருந்து ISI மூலம் விடுவிக்கப்பட்டவர்.
சனம் ஜாஃபர் — மிர்பூரைச் சேர்ந்தவர், சோபோரில் கொல்லப்பட்டார்.
இந்த ஆதாரங்களை உலக நாடுகள் மத்தியில் இந்தியா சமர்ப்பித்துள்ள நிலையில் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிப், இதனை மறுத்துள்ளார். ஆனால் கடந்த காலங்களில் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளை ஆதரித்ததாகவே அவர் வெளிநாட்டு ஊடகத்துடன் பேசியிருந்தார்.
ஈரான், இஸ்ரேல், இத்தாலி, சவூதி அரேபியா, UAE, இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்த தாக்குதலை கண்டித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் கூட கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.