3 வினாடிகளில் ஸ்கேன்.. ஒரு மணி நேரத்தில் 1200 பேர்.. இனி காத்திருக்க வேண்டாம்..!

  விமான நிலையங்களில் பயணிகளை ஸ்கேன் செய்யும் ஸ்கேனர்களுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இனி இருக்காது என்றும் நவீன வகை ஸ்கேனர்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் இந்த ஸ்கேனர் மூலம் மூன்று வினாடிகளில் ஸ்கேன்…

scanner

 

விமான நிலையங்களில் பயணிகளை ஸ்கேன் செய்யும் ஸ்கேனர்களுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இனி இருக்காது என்றும் நவீன வகை ஸ்கேனர்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் இந்த ஸ்கேனர் மூலம் மூன்று வினாடிகளில் ஸ்கேன் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த நவீன வகை ஸ்கேனர் முதலில் டெல்லியில் பயன்படுத்தப்பட இருப்பதாகவும் அதனை தொடர்ந்து இந்தியாவின் முக்கிய விமான நிலையங்களில் பயன்படுத்த திட்டமிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

மே மாதத்திலிருந்து, டெல்லியின் இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையத்தில் உள்ள டெர்மினல் 1 மற்றும் டெர்மினல் 3-இல் நவீன முழு உடல் ஸ்கேனர்கள் சோதனைக்காக நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட் தரப்பில் இதுகுறித்து கூறியபோது இரு டெர்மினல்களிலும் தலா இரண்டு என மொத்தம் நான்கு ஸ்கேனர்கள் நிறுவப்படும் என்றும், இதன் நோக்கம், பாதுகாப்பை மேம்படுத்துவதோடு, பயணிகளின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதாகும் என்றும் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நவீன வகை ஸ்கேனர்கள், மில்லிமீட்டர்-அலை (70–80 GHz) தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் கதிர்வீச்சு வெளியேற்றப்படுவதில்லை, எனவே X-கதிர் இயந்திரங்களை காட்டிலும் பாதுகாப்பானவை. ஒவ்வொரு ஸ்கேன் செய்யும் நேரம் வெறும் 3 விநாடிகள் மட்டுமே. ஒரு மணி நேரத்தில் 1,200 பேரை ஸ்கேன் செய்ய முடியும். இது தற்போது அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்களில் ஏற்கனவே இந்த நவீன ஸ்கேனர்கள் பயன்படுத்தப்படுகிறது.

ஸ்கேனரில் நிஜ உடல் பாகங்கள் காட்டப்படாது. அதன் பதிலாக 2D வடிவத்தில் மட்டுமே காண்பிக்கப்படும், எனவே தனியுரிமை பாதுகாக்கப்படுகிறது. எந்தவொரு படங்களும் சேமிக்கப்படுவதில்லை. ஒவ்வொரு ஸ்கேனர் யூனிடிலும் நான்கு தொடுதிரை மானிட்டர்கள் உள்ளன, பயணிகளுக்கு வழிகாட்டவும், ஸ்கேன் முடிவுகளை உறுதிப்படுத்தவும் உதவுகின்றன. 3.3 அடி முதல் 6.7 அடி உயரமுள்ளவர்கள் வரை ஸ்கேன் செய்யும் திறன் உள்ளது.