மேலும் மனிதர்களின் மதத்தை கேட்ட பிறகு கொலை செய்வது எங்கள் மதத்தில் எப்போதும் இல்லை. பாகிஸ்தான் எப்போதும் தனது அணுகுண்டுகள் கையிருப்பை பற்றி பெருமையாக பேசுகிறது. ஆனால் பாகிஸ்தான் எப்போதும் நினைவில் வைத்து கொள்ள வேண்டிய ஒன்று என்னவெனில், குற்றமற்ற மக்களை கொல்வதை ஏற்க எந்த நாடும் அமைதியாக இருக்காது. இந்தியாவில் வந்து, மதம் கேட்டுக் கொல்வது என்பது எந்த மதம்? என ஒவைசி கேள்வி எழுப்பினார்.
இந்தியாவை அணுயுத்தத்தால் மிரட்டும் பாகிஸ்தானுக்கு ஓவைசி எச்சரிக்கை விடுத்தார். “பாகிஸ்தானை போல் இந்தியா பின்னோக்கிய நாடு இல்லை, பாகிஸ்தான் பாதி நூற்றாண்டு பின்னோக்கி உள்ளனர் என்றால், இந்தியா பாதி நூற்றாண்டு முன்னோக்கி உள்ளது. இந்தியாவின் இராணுவ செலவுத்தொகை மட்டும் பாகிஸ்தானின் முழு நாட்டுத் திறனைக் காட்டிலும் அதிகம். பாகிஸ்தான் தலைவர்கள் இந்தியாவை அணு ஆயுதம் கொண்டு மிரட்ட வேண்டாம்,” என்றும் கூறினார்.
இந்த கருத்துகள், பாகிஸ்தான் அமைச்சர் ஹனிப் அப்பாசி இந்தியாவை நோக்கி, ‘கௌரி’, ‘ஷஹீன்’, ‘கஸ்னவி’ உள்ளிட்ட ஏவுகணைகள் மற்றும் 130 அணு ஆயுதங்கள் இந்தியாவிற்காகவே வைத்திருக்கின்றோம் என மிரட்டிய பிறகு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஓவைசி இந்திய அரசுக்கு ஒரு அறிவுரையும் தெரிவித்தார்: “இந்தியாவின் ஒரு பகுதியாக காஷ்மீர் இருக்கிறது என்பதுபோல, காஷ்மீரி மக்கள் கூட நம் நாட்டின் ஒரு அங்கமே, காஷ்மீர் மக்களின் உணர்வுகளையும் இந்தியா புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.