NIA அறிக்கையின் படி, தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், பாகிஸ்தான்-ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதியில் இருந்தவர்களுடன் திட்டமிட்டு அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்துள்ளனர் என்றும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலனாய்வு தகவல்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் மூலம், இது திட்டமிட்ட எல்லை கடந்த நடவடிக்கையாக இருந்தது என தெரிகிறது. தாக்குதலுக்கு முன், பேடாப் பள்ளத்தாக்கில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது என்றும், இது தாக்குதலுக்கான ஆயத்தங்களை முன்பே செய்திருப்பதை சுட்டிக்காட்டுகிறது என்றும் தெரிகிறது.
இந்த தாக்குதலில் உள்ளூர் உதவியாளர்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர் என்பதும், அவர்கள் தங்குமிடம், போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு வசதிகளை பயங்கரவாதிகளுக்கு வழங்கியுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகப்படுபவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிராக சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
NIA விசாரணையின் ஒரு பகுதியாக, 150 பேருக்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தாக்குதல் நடந்த இடத்தில் 3D மேப்பிங் செய்து, குற்ற நிகழ்வு மறுபடியும் உருவாக்கப்பட்டுள்ளது. தாக்குதல் இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட சில பொருட்கள் அறிவியல் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. அதன் முடிவுகள் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அறிக்கை தற்போது NIA இயக்குநரால் பரிசீலிக்கப்பட்டு, உள்துறை அமைச்சகத்துக்கு வழங்க தயாராக உள்ளது. இதன் அடிப்படையில், உள்ளூர் மற்றும் எல்லை கடந்த பயங்கரவாத வலைத்தளங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
