வேலைக்கு வெளியூர் செல்கிறீர்களா? இனி PG குறித்து கவலை வேண்டாம்.. அதற்கும் வந்துவிட்டது ஒரு ஸ்டார்ட் அப்..!

  வேலைக்காகவோ, படிப்புக்காகவோ புதிதாக ஒரு நகரத்திற்கு செல்லும் இளம் தலைமுறைக்கு இது ஒரு புதிய தொடக்கம். மனதில் நிறைந்த கனவுகள், எதிர்பார்ப்புகள், ட்ரீம் ப்ளான்கள் ஆகிய அனைத்தும் நனவாக ஒரு நல்ல வாய்ப்பு…

pg

 

வேலைக்காகவோ, படிப்புக்காகவோ புதிதாக ஒரு நகரத்திற்கு செல்லும் இளம் தலைமுறைக்கு இது ஒரு புதிய தொடக்கம். மனதில் நிறைந்த கனவுகள், எதிர்பார்ப்புகள், ட்ரீம் ப்ளான்கள் ஆகிய அனைத்தும் நனவாக ஒரு நல்ல வாய்ப்பு இளைஞர்களுக்கு கிடைத்துள்ளது.

பொதுவாக வேலை செய்யும் இளைஞர்கள் தங்கியிருக்கும் PG-க்கள் குறுகிய அறை, சுமாரான சாப்பாடு, சோம்பல், தனியுரிமை இல்லாத சூழல்,  Wi-Fi கூட இல்லாத நிலை என்பது தான் பல இளைஞர்கள் சந்திக்கும் அன்றாட வாழ்க்கையாக உள்ளது.

இதை முற்றிலுமாக மாற்ற தான் Stanza Living வந்துள்ளது. 2017-ல் அனிந்த்யா தத்தா மற்றும் சந்தீப் டால்மியா ஆகியோரால் தொடங்கப்பட்ட Stanza Living, இந்திய இளைஞர்களுக்கான வாழ்க்கையை சீரமைக்க முடிவு செய்தது.

வாடகை வீடு தேடல், வீட்டுத்தனியாளருடன் வாக்குவாதம், அடிக்கடி மாறும் சூழ்நிலை இதையெல்லாம் தவிர்த்து, முழுமையாக நிர்வகிக்கப்படும், கவலையில்லாத, நவீன co-living இடங்களை வழங்குகிறது.

சீரமைக்கப்பட்ட அறைகள்

ஹைஸ்பீடு Wi-Fi

சத்தான உணவு

வீட்டு வேலை, துணி துவைக்கும் சேவை

24 மணி நேர பாதுகாப்பு

இவை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் Stanza Living நிறுவனம் ஏற்பாடு செய்து தருகிறது.

Stanza Living ஒரு “வசதியான இடம்” மட்டுமல்ல. இது உணர்வுள்ள உறவுகளும், நட்புகளும் உருவாகும் இடம். ஒரே மாதிரியான கனவுகளுடன் இருக்கும் பல இளைஞர்கள் ஒன்றாக வாழும் இடமாக மாற்றப்பட்டுள்ளது.

Stanza Living நிறுவனத்தின் செயலி வழியாக படுக்கை முன்பதிவு,  பராமரிப்பு கோரிக்கை,  பரஸ்பரம் பொருந்தக்கூடிய roommate தேடுதல்  அனைத்தும் சில கிளிக்குகளில் முடிகிறது.

இந்திய மாணவர்கள் மற்றும் இளம் தொழிலாளர்களுக்கான வாழ்க்கையை next level-க்கு Stanza Living எடுத்துச் சென்றுள்ளது.

இப்போதே 23 நகரங்களில், 75,000-க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன. இது ஒரு சாதனை மட்டுமல்ல, இந்தியாவின் வாடகை வீட்டு சந்தையை முழுமையாக மாற்றும் புரட்சி.

புதிய நகரம், புதிய வாழ்க்கையை தேடி வரும் இளைஞர்களுக்கு Stanza Living சிக்கலைத் தீர்க்கும் ஒரு தீர்வு மட்டும் இல்ல, இது வசதியும், மனிதநேயமும் கலந்து அமைந்த ஒரு எதிர்கால வீட்டு அனுபவம்.  இது தான் இளம் தலைமுறைக்கு தேவையான வீடு வாழ்வு!