இந்து கோவிலுக்கு வந்த பெண்களின் நெற்றியில் குங்குமம் வைத்த முஸ்லீம் இளைஞர்..நெட்டிசன்கள் ஆவேசம்..!

  கேரளாவை சேர்ந்த யூடியூபர் ஒருவர், தன்னுடைய வெளிநாட்டு தோழிகள் இந்தியாவுக்கு வருகை தந்த போது, அவர்களை ஒரு இந்து கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அப்போது, அவர் கோவிலில் உள்ள குங்குமத்தை வாங்கி, அவர்களுடைய…

sindhoor

 

கேரளாவை சேர்ந்த யூடியூபர் ஒருவர், தன்னுடைய வெளிநாட்டு தோழிகள் இந்தியாவுக்கு வருகை தந்த போது, அவர்களை ஒரு இந்து கோவிலுக்கு அழைத்துச் சென்றார். அப்போது, அவர் கோவிலில் உள்ள குங்குமத்தை வாங்கி, அவர்களுடைய நெற்றியில் வைத்த வீடியோவை பதிவு செய்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. ஷாஜகான் என்ற அந்த யூடியூபர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோவில், அவர் தனது வெளிநாட்டு நண்பர்களுடன் கோவிலுக்கு செல்கிறார். அதன் பிறகு, கோவிலில் கொடுத்த குங்குமத்தை வாங்கி, தனது வெளிநாட்டு தோழிகளின் நெற்றியில் வைக்கிறார்.

“நான் ஒரு முஸ்லிமாக இருந்தாலும், வெளிநாட்டு பெண்களுடன் இந்து கோவிலுக்கு சென்ற போது எனக்கு நிம்மதி, அன்பு இருந்தது. நல்ல வரவேற்பும் கிடைத்தது. இந்தியாவின் இந்த மதச்சார்பற்ற தன்மை என்பது வெறும் கொள்கை அல்ல, அது நாள்தோறும் கடைபிடிக்கப்படுகிறது. நாங்கள் அனைத்து மதங்களையும் மதிக்கிறோம், கொண்டாடுகிறோம். பாதைகள் வேறாக இருக்கலாம், ஆனால் அன்பு ஒன்றே,” என்று அந்த வீடியோவில் அவர் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பலர் அந்த இளைஞருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். “குங்குமம் என்பது திருமணமான இந்து பெண்கள் தங்களது நெற்றியில் வைக்கும் ஒரு விஷயம். இது அவர்களின் திருமண நிலையை காட்டும் அடையாளமாக உள்ளது. ஒரு பெண்ணுக்கு குங்குமம் நெற்றியில் வைப்பது என்பது, அவருடைய கணவரால் மட்டுமே இருக்க முடியும். தோழிகளுக்கு குங்குமம் வைப்பதே இந்து மதத்தை அவமதிக்கும் செயல்,” என்று பதிவு செய்து வருகின்றனர்.

இதற்கு அந்த யூடியூப்பர் ஷாஜகான் விளக்கம் அளித்துள்ளார்: “திருமணம் ஆனவர்கள் தான் குங்குமம் வைப்பார்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால், இந்த விஷயத்திற்கு இவ்வளவு கண்டனம் தெரிவிக்க வேண்டுமா என்று எனக்கு தெரியவில்லை. திருமணம் ஆகாதவர்கள் குங்குமம் வைக்க கூடாது என்று எதுவும் விதி இல்லை. திருமணம் ஆகாதவர்கள் குங்குமம் வைக்க கூடாது என்று தெரிந்திருந்தால், நான் இதை செய்திருக்க மாட்டேன். நான் எந்த மதத்தையும் இழிவுபடுத்துவதற்காக செய்யவில்லை. அனைத்து மதங்களையும் மரியாதை செய்வதற்கு நான் முயற்சித்து வருகிறேன்,” என்று கூறியுள்ளார்.

இருப்பினும், நெட்டிசன்கள் அவரது செய்கைக்கு கடும் கண்டனங்கள் தெரிவித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.