65 வயதான சோக்ஸி , இதுவரை யாரிடமும் சிக்காமல் தப்பி ஓடிக் கொண்டிருந்த நிலையில், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை சார்பாக முன்வைக்கப்பட்ட வழிகாட்டுதலின் பேரில், கடந்த சனிக்கிழமை பெல்ஜியம் போலீசாரால் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அவர் பெல்ஜியம் காவலில் உள்ளதாகவும்,அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையில் உள்ள நீதிமன்றம் 2018ஆம் ஆண்டு மே 23, மற்றும் 2021 ஆம் ஆண்டு ஜூன் 15, ஆகிய தேதிகளில் பிறப்பித்த இரண்டு பிடிவாரண்டுகளின் அடிப்படையில், பெல்ஜிய போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
ஆன்டிகுவா மற்றும் பார்புடாவின் குடிமகனாக மாறிய மெஹுல் சோக்ஸி, தனது மனைவி ப்ரீதி சோக்ஸியின் ஆண்ட்வெர்ப் என்ற நகரத்தில் வசித்து வந்தார். அவருக்கு முந்தைய தகவலின்படி, மருத்துவ சிகிச்சைக்காக செல்வதாக கூறி அவர் கரீபியன் நாட்டை விட்டு புறப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் சோக்ஸி சுவிட்சர்லாந்திற்கு தப்பிச் செல்ல முயன்றதாகவும், புற்றுநோய் சிகிச்சைக்காக பெல்ஜியத்துக்கு சென்றதாக சொல்லப்பட்ட நிலையில் அவர் பிடிபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா சார்பாக, பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் அவர் தேடப்படும் குற்றவாளி என உறுதி செய்யும் அனைத்து ஆவணங்களும் பெல்ஜிய அதிகாரிகளுடன் பகிரப்பட்டன. மெஹுல் சோக்ஸி இந்தியாவிலிருந்து 2018ஆம் ஆண்டு தப்பி ஆண்டிகுவாவில் செட்டிலாகி இருந்தார். அவர் அந்த நாட்டின் குடிமகனாக 2017 ஆம் ஆண்டு மாறி விட்டிருந்தார். இதற்கு முந்தைய முறையில் 2021ஆம் ஆண்டு டொமினிக்காவில் கைது செய்யப்பட்டிருந்தார், அப்போது 51 நாட்கள் காவலில் இருந்த பிறகு விடுவிக்கப்பட்டார்.
இந்திய வரலாற்றில் மிகப்பெரிய வங்கி மோசடிகளில் ஒன்றான இந்த வழக்கில், மெஹுல் சோக்ஸி மற்றும் அவரது அக்கா மகன் நிரவ் மோடி ஆகியோர் முக்கிய குற்றவாளிகள். பஞ்சாப் நேஷனல் வங்கியை ரூ.13,500 கோடி அளவிற்கு ஏமாற்றியுள்ளனர். 2018ஆம் ஆண்டு, இருவரும் நாடு கடந்து தப்பிச் சென்ற பிறகு இந்த மோசடி வெளிவந்தது. அதே ஆண்டில் சிறப்பு நீதிமன்றம் இருவருக்கும் ஜாமீனில்லா பிடிவாரண்டுகளை பிறப்பித்தது. அதன் பிறகு, பல வழக்குகள் பதியப்பட்டு, சொக்ஸி தொடர்புடைய ஆயிரக்கணக்கான கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவுக்குத் திருப்பி அழைத்து வரும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான மெஹுல் சொக்ஸி தொடர்புடைய “ஜிதாஞ்சலி ஜெம்ஸ் லிமிடெட்” நிறுவனத்தின் சொத்துகளை ஏலமிடும் வழியை மும்பை சிறப்பு சிபிஐ நீதிமன்றம் இவ்வருடம் பிப்ரவரியில் ஒப்புதல் அளித்தது. மேலும் சொத்துகக்ளை மதிப்பீடு செய்து ஏலமிட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மும்பை மற்றும் சூரத்தில் உள்ள பல வீடுகள், அலுவலகங்கள் மற்றும் வர்த்தக யூனிட்கள் உள்ளிட்ட சொத்துகள் இதில் அடங்கும். அமலாக்கத் துறையின் மேற்பார்வையில், அனைத்து சட்ட விதிகளையும் பின்பற்றி ஏலம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் மும்பை தாக்குதலுக்கு காரணமானவர் என்று குற்றம் தாக்கப்பட்டிருக்கும் ராணா கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில் தற்போது மெஹுல் சோக்ஸி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரும் விரைவில் நாடு கடத்தப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இவையெல்லாம் பிரதமர் மோடி அரசியல் அடுத்தடுத்து நடைபெறும் நடக்கும் அதிசயங்கள் என்றும் ஊடகங்கள் பாராட்டி வருகின்றன.