சென்னை: ரேஷன் கார்டு வைத்துள்ளவர்கள் மிக குறைந்த வட்டியில் ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை கடன் வரை கடன் பெற முடியும்? அரசாங்கங்கள் வைத்துள்ள இந்த திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா? இதை பாருங்கள்.
மற்ற எல்லா ஆதாரத்தையும் விட ரேஷன் கார்டு தான் இந்திய குடிமகன் என்பதற்கான மிகமுக்கியமான ஆதாரமாக பார்க்கப்படுகிறது. மற்ற சான்றிதழ்களை எளிதாக வாங்கிவிடலாம். ஆனால் ரேஷன் கார்டு என்பது அவ்வளவு எளிதாக ஒருவருக்கு கிடைத்துவிட முடியாது. ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கே மத்திய மாநில அரசுகள் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
இலவச அரிசி, நிவாரண உதவி, மகளிர் உரிமை தொகை,பொங்கல் பரிசு என தமிழ்நாட்டில் வழங்கப்படும் எந்த திட்டத்தில் சேரவும் ரேஷன் கார்டு இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் இப்படி என்றால் மற்ற மாநிலங்களிலும் இதேபோல் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
மற்ற மாநிலங்களில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு பிபிஎல் அட்டைகள் (பிபிஎல் ரேஷன் கார்டுகள்) வழங்கப்படுகிறது, இந்த அட்டை மூலம் அவர்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த அட்டை மூலம் ரூ.10 லட்சம் வரை கடனும் தரப்படுகிறது.
ஹரியானா மாநிலத்தில் வசிக்கும் ஏழை மக்கள், பிபிஎல் கார்டு வைத்திருந்தால் குறைந்த வட்டியில் கடன் பெறலாம். நம்மூரில் தாட்கோ மூலம் எப்படி கடன் தருகிறார்களோ அது போல் ஹரியானாவில் பிபிஎல் கார்டு வைத்துள்ளவர்களுக்கு ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன் தரப்படுகிறது.
தொழில்துறை மற்றும் சிறு வணிகத்தின் கீழ் NSFDC (National Scheduled Castes Finance and Development Corporation) மூலம் பட்டியலிடப்பட்ட சாதிகளைச் சேர்ந்த BPL ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு தொழில் கடன்கள் வழங்கப்படுவதாக அந்த மாநில அரசு வட்டாரங்கள் சொல்கின்றன.
ஹரியானாவில், பட்டியலிடப்பட்ட சாதி நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் இருக்கிறது. இந்த அமைப்பு தான் நம்மூர் தாட்கோ பால் சுயவேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ் பட்டியல் சாதியின் BPL கார்டு வைத்திருக்கும் இளைஞர்கள் சுய வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்ற நோக்கிறலும், சொந்தத் தொழிலைத் தொடங்க வேண்டும் என்ற நோக்கத்திலும் கடன் வழங்கப்படுகிறது.
ஹரியானாவில் பிபிஎல் ரேஷன் கார்டில் கடன் பெற வேண்டும் என்றால் முதலில் வங்கிக்குச் சென்று, இந்த அட்டையில் கிடைக்கும் கடன் குறித்த தகவல்களைப் பெற்று, பின்னர் விண்ணப்பப் படிவத்தை எடுக்க வேண்டும். அதன் பிறகு, அனைத்து தொடர்புடைய ஆவணங்களுடன் படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும். இந்தக் கடனுக் குறிப்பிடட இளைஞர் தகுதி பெற்றிருந்தால், விண்ணப்பப் படிவம் சமர்ப்பிக்கப்படும்.
படிவத்தில் கொடுக்கப்பட்ட தகவலை சரிபார்த்த பிறகு, கடன் தொகை வழங்கப்படுகிறது. விடுவிக்கப்படும். குறிப்பிட்ட அளவிற்க மானியமும் அரசு தருகிறது. ஆண்டு வருமானம் ஒரு லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களுக்கு மட்டுமே இந்த பிபிஎல் அட்டை வழங்கப்படுகிறது.