EPFO : பிஎப் கணக்கு வைத்துள்ளவர்களுக்கு 50000 தரும் மத்திய அரசு.. சூப்பர் விதி பற்றி தெரியுமா?

By Keerthana

Published:

சென்னை: EPFO வாடிக்கையாளர்கள்/சந்தாதாரர்களுக்கு ஒரு முறையான ஓய்வூதிய சேமிப்புத் திட்டத்தின் படி மத்தியஅரசு 50000 வரை நேரடி பலனாக தருகிறது. தொடர்ந்து 20 வருடங்கள் ஒரே கணக்கில் பங்களித்தவர்கள் இந்த லாயல்டி-கம்-லைஃப் பலன்களைப் பெற முடியும்

மாத சம்பளத்திற்கு வேலைக்கு செல்லும் ஒவ்வொரு வரும் பலன் பெற வேண்டும் என்ற நோக்கில் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு செயல்படுகிறது. EPFO​​ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்பபடும் இதில் எல்லா நிறுவனங்களும் உறுப்பினர்களாக கண்டிப்பாக சேர வேண்டும். பிஎப் எனப்படும் இந்த வசதி ஓரளவு பெரிய நிறுவனங்கள் கண்டிப்பாக தர வேண்டும். இதன்படி இபிஎப்ஓ தொழிலாளர்கள் நலனுக்காக பல்வேறு விதிகளை வகுத்து செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் EPFO அமைப்பு பிஎப் தொடர்பான முக்கியமான விதி ஒன்றினை வெளியிட்டிருக்கிறது.

இதன்படி, EPFO வாடிக்கையாளர்கள்/சந்தாதாரர்களுக்கு ஒரு முறையான ஓய்வூதிய சேமிப்புத் திட்டம் வழங்கப்படுகிறது. 50 ஆயிரம் பலன் தரும் திட்டத்தினை பற்றி பார்ப்போம்.

அனைத்து PF கணக்கு வைத்திருப்பவர்களும் வேலை மாறிய பிறகும் அதே EPF0 கணக்கில் தொடர்ந்து பங்களிக்கலாம். தொடர்ந்து 20 வருடங்கள் ஒரே கணக்கில் பங்களித்த பிறகு, லாயல்டி-கம்-லைஃப் பலன்களைப் பெற முடியும்.

20 ஆண்டுகளாக தங்கள் EPF கணக்கில் தொடர்ந்து பங்களித்து வரும் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு லாயல்டி-கம்-லைஃப் நன்மையை நீட்டிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி 20 ஆண்டுகளாக வழக்கமான பங்களிப்புகளைச் செய்த சந்தாதாரர்கள் ரூ. 50,000 கூடுதல் பலனைப் பெற முடியும்.

லாயல்டி-கம்-லைஃப் நன்மையின் கீழ், ரூ.5,000 வரை அடிப்படைச் சம்பளம் உள்ளவர்கள் ரூ.30,000 பலனைப் பெறலாம். அடிப்படை சம்பளம் ரூ.5,001 முதல் ரூ.10,000 வரை உள்ளவர்களுக்கு ரூ.40,000 பலன் பெறலாம்.. மேலும் அடிப்படை சம்பளம் ரூ.10,000க்கு மேல் இருந்தால், ரூ50000 பெற முடியும்.

EPFO சந்தாதாரர்கள் இந்த நன்மையைப் பெற வேண்டும் என்றால், வேலைகளை மாற்றும் போது அதே EPF கணக்கைத் தொடர வேண்டும் அவ்வளவு தான். இதற்கு, உங்களின் பழைய பணியமர்த்துபவர் மற்றும் தற்போது பணிபுரியும் நிறுவனத்திடம் தகவல் கொடுத்தால் போதும்.

இது ஒருபுறம் எனில் மத்திய அரசு, 1995ஆம் ஆண்டு ஊழியர் ஓய்வூதியத் திட்டத்தில் (EPS) திருத்தம் கொண்டு வந்திருக்கிறது. ஆறு மாதங்களுக்கும் குறைவான சேவையில் உள்ள ஊழியர்களுக்கு withdrawal benefits இனி கிடைக்கும். இந்த திட்டப்படி வேலையை விட்டு விட்டு வெளியேறும் 7 லட்சத்திற்கும் அதிகமான EPS உறுப்பினர்களுக்கு இந்த திட்டத்தால் பயன்பெறுவார்கள்.

மேலும் உங்களுக்காக...