எல்.ஐ.சி 100 வருடங்களுக்கான பத்திரங்களை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கு ரிசர்வ் வங்கியின் அனுமதி கோரியுள்ளதாகவும் வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் முன்னணி காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எல்.ஐ.சி, பல்வேறு விதமான திட்டங்களை பயனர்களுக்கு வழங்கி வருகிறது என்பது தெரிந்தது. இந்த நிலையில், LIC பலவிதமான காப்பீடு திட்டங்களை அறிமுகம் செய்து வரும் நிலையில், நீண்ட கால பத்திரங்களில் முதலீடு அவசியம் என கருதுகிறது.
எனவே, 100 வருடங்கள் வரை நீடிக்கும் அரசு பத்திரங்கள் உள்ளிட்ட நீண்ட கால பத்திரங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக இந்திய ரிசர்வ் வங்கியில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் எல்.ஐ.சி-யின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தற்போது, இந்திய ரிசர்வ் வங்கி 20 முதல் 30 ஆண்டுகள் வரை நீடிக்கும் பத்திரங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. சில நிறுவனங்களுக்கு 40 ஆண்டு பத்திரங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், 50 முதல் 100 வருடங்கள் வரை நீடிக்கும் பத்திரங்களை எல்.ஐ.சி வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், ரிசர்வ் வங்கி அதிகாரிகள் இதற்கு ஒப்புதல் கொடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஏற்கனவே சில நாடுகளில் 100 வருட பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவில் இதுவரை அந்த வகை பத்திரங்கள் அறிமுகமாகவில்லை. இதற்கு குறைந்த அளவிலான தேவை என்று கூறப்படுகிறது.