TCS வேலையை ராஜினாமா செய்துவிட்டு முருங்கை மரம் வளர்க்கும் தம்பதி.. கொட்டும் பணமழை..!

  TCS வேலையை ராஜினாமா செய்து விட்டு சொந்த ஊருக்கு வந்து முருங்கை மர விவசாயம் செய்த நிலையில், தற்போது அவருக்கு ஒரு ஏக்கருக்கு 10 லட்ச ரூபாய் லாபம் கிடைப்பதாக கூறப்படுவது பரபரப்பை…

farm

 

TCS வேலையை ராஜினாமா செய்து விட்டு சொந்த ஊருக்கு வந்து முருங்கை மர விவசாயம் செய்த நிலையில், தற்போது அவருக்கு ஒரு ஏக்கருக்கு 10 லட்ச ரூபாய் லாபம் கிடைப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் உள்ள TCS நிறுவனத்தில் பணியில் இருந்த ஜிதேந்திரா, உணவில் ஏற்படும் தீவிர விளைவுகளை உணர்ந்தார். இதனால் தனது ஆரோக்கியம் குறித்து கவலைப்பட்ட அவர், வேலையை ராஜினாமா செய்து விட்டு மனைவியுடன் தனது சொந்த கிராமத்திற்கு திரும்பினார். அவரது மனைவியும் TCS நிறுவனத்தில் பணியாற்றியதாக தெரிகிறது.

இந்த நிலையில், ஜிதேந்திரா 2017ஆம் ஆண்டு பெங்களூரில் உள்ள நண்பரின் வீட்டிலிருந்து சில முருங்கை செடிகளை கொண்டு வந்து மொட்டை மாடியில் வளர்த்தார். அதன் இலைகள் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதை புரிந்து கொண்டவுடன், சொந்த ஊருக்கு சென்றதும் தனது நிலத்தில் முருங்கை மரங்களை வளர்க்கத் தொடங்கினார்.

முருங்கை மரத்தின் இலைகள், காய்கள், பூக்கள் ஆகியவை வைட்டமின்கள், தாது உப்புக்கள், ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளதால், இது ஒரு சூப்பர் உணவாக கருதப்படுகிறது. குறிப்பாக, வெளிநாடுகளில் முருங்கை இலைகளும் முருங்கை இலை பொடிகளுக்கும் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளதை அறிந்த ஜிதேந்திரா, தற்போது முருங்கை இலைகள், முருங்கை இலை பொடிகள், முருங்கை காய்கள், முருங்கைப்பூ ஆகியவற்றை ஏற்றுமதி செய்து வருகிறார்.

தற்போது, ஒரு ஏக்கருக்கு 10 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது என்றும், எதிர்காலத்தில் இது மேலும் அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். 2033ஆம் ஆண்டுக்குள் உலகளவில் முருங்கை இலையின் சந்தை 12 மில்லியன் டாலர்கள் வரை இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜிதேந்திரா மற்றும் அவரது மனைவி இணைந்து ‘Husband & Wife Farm’ என்ற பெயரில் இயற்கை முறையில் முருங்கை விவசாயம் செய்து வருகின்றனர். TCS நிறுவனத்தில் சில ஆயிரம் சம்பளம் பெற்ற அவர், இன்று முருங்கை விவசாயம் மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.