பீகார் மாநிலத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் பணியாற்றி வந்த தீபாலி என்ற ஆசிரியர், தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், “நாட்டின் எத்தனையோ பகுதிகளில் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் எனக்கு பணியிட வாய்ப்பு இருந்திருக்கலாம். பலர் கொல்கத்தாவை விரும்ப மாட்டார்கள், ஆனால் நான் அதற்கும் தயார் என்று தான் இருந்தேன்.
பெங்களூரு, டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளில் எனக்கு போஸ்டிங் கிடைக்கும் என எதிர்பார்த்திருந்தேன். ஆனால் என்னை மட்டும், எந்த காரணத்திற்காக இந்தியாவின் மிக மோசமான பிகார் மாநிலத்திற்கு அனுப்பி வைத்தார்கள் என்று தெரியவில்லை. பிகாரின் நிலைமை மிக மோசமாக உள்ளது. இங்கு உள்ள மக்களுக்கு எந்த ஒரு குடிமை உணர்வும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ வைரலான நிலையில், ஆசிரியர் தீபாலிக்கு கடும் கண்டனங்கள் குவிந்தன. இதனை அடுத்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.