மரண அடி வாங்கிய பாகிஸ்தான்.. ஓடி ஒளிந்த எதிரி ராணுவ வீரர்கள்.. ஆபரேஷன் சிந்தூரின் புதிய  வீடியோ..!

  பாகிஸ்தானுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையாக நடைபெற்ற இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வீடியோ ஒன்றை எல்லை பாதுகாப்பு படை  வெளியிட்டுள்ளது. இதில் இந்திய ராணுவத்தின் துல்லியமான தாக்குதல்கள் மற்றும் ராணுவ சக்தி அழுத்தமாக காணப்படுகிறது.…

video

 

பாகிஸ்தானுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையாக நடைபெற்ற இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ வீடியோ ஒன்றை எல்லை பாதுகாப்பு படை  வெளியிட்டுள்ளது. இதில் இந்திய ராணுவத்தின் துல்லியமான தாக்குதல்கள் மற்றும் ராணுவ சக்தி அழுத்தமாக காணப்படுகிறது.

இந்த வீடியோவில், பாகிஸ்தானின் லூனி, புத்துவால், பைரோநாத், பிபி தந்தார் உள்ளிட்ட இடங்களில் இந்திய ராணுவம் மேற்கொண்ட குறிவைத்த தாக்குதலால் ஏற்பட்ட பெரும் சேதங்களை காண்பிக்கிறது.

பின்னர் வெளியிடப்படும் காட்சிகளில், இந்திய ராணுவம் புத்துவால், தந்தார், டிப்பு, மும்தாஜ் காம்ப்ளெக்ஸ், சமீல், சைதாவாலி, உம்ரான் வாலி , நியூ சாம்பியன், சப்ரார் எஃப்டபிள்யூடி, சோட்டா சக்தி, அப்ஸல் ஷஹீது, ஜங்களோரா மற்றும் யூ.எம்.ஜி. பங்கர் ஆகிய பல பாகிஸ்தான் போஸ்டுகளை அழித்து, பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தங்கள் நிலைகளை விட்டு ஓட வைக்கப்பட்டதை காணலாம்.

இந்த வீடியோ, ஏப்ரல் 22 அன்று நடந்த பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலில் 26 உயிர்கள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக தொடங்கப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதை தொடர்ந்து, ராணுவம் வெளியிட்ட வீடியோ ஆகும்.

இதில், ராணுவம் தயார் நிலையில் இருப்பதும், செயல்பாடுகளின் வெற்றியை உறுதி செய்யும் உறுதியும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த வீடியோவில், இந்த நடவடிக்கையில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு வீரர்கள் மரியாதை செலுத்தும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

வீடியோ இறுதியில் “ஜெய் ஹிந்த்” என்ற வாசகத்துடன் முடிகிறது.

இந்நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘ஆபரேஷன் சிந்தூர்’ இன்னும் முடிவடையவில்லை என உறுதிப்படுத்தியுள்ளார்.

முதல் முறையாக ராணுவத்தின் வார் ரூம் புகைப்படங்களை இந்திய ராணுவம் சமீபத்தில்  வெளியிட்டுள்ளது. இதில், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை கண்காணிக்கப்பட்ட காட்சிகள் உள்ளன.

https://x.com/Goreunit/status/1927263971771375797