வெளிநாட்டுக்கு போக வேண்டாம்.. இந்தியா தான் சொர்க்கம்.. கனடாவில் வாழும் இந்தியரின் பதிவு வைரல்..!

  இந்தியாவில் உள்ள பலருக்கும், நன்றாக படித்து அமெரிக்கா, கனடா, ஜெர்மனி போன்ற வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும், வசதியுடன் வாழ வேண்டும், வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பதே கனவாக உள்ளது. ஆனால், இந்தியாவில் இருந்து…

india vs canada

 

இந்தியாவில் உள்ள பலருக்கும், நன்றாக படித்து அமெரிக்கா, கனடா, ஜெர்மனி போன்ற வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டும், வசதியுடன் வாழ வேண்டும், வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பதே கனவாக உள்ளது.

ஆனால், இந்தியாவில் இருந்து கனடா சென்ற ஒருவர், தனது சமூக வலைத்தளத்தில், “இந்தியர்கள் யாரும் தயவு செய்து நாட்டை விட்டு வெளியே போக வேண்டாம். வெளிநாடு சென்றவுடன் தான் நீங்கள் ஏமாற்றப்பட்டு விட்டீர்கள் என்பதை உணர்வீர்கள். இந்தியா தான் சொர்க்கம்! இந்தியாவிலேயே ஒரு நல்ல வேலையை பார்த்துக் கொண்டு நிம்மதியாக குடும்பத்துடன் வாழுங்கள்” என்று பகிர்ந்துள்ளார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அவர் தனது ரெடிட் சமூக வலைதளத்தில், “ஒவ்வொரு நாளும் இந்தியர்கள் பலர் வெளிநாட்டுக்குச் செல்ல வேண்டும் என்ற கனவுகளை கொண்டிருப்பதை பார்க்கிறேன். அவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். வெளிநாடு சென்றால் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பினேன்.  தற்போது நான் கனடாவில் வசிக்கிறேன். உங்களுக்குத் திருத்தமாகச் சொல்ல விரும்புகிறேன், வெளிப்படையாகக் கனடாவின் வாழ்க்கை மிகவும் நன்றாக இருப்பது போல தெரிந்தாலும், இங்கு வந்ததும் நீங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டீர்கள் என்பதை நிச்சயம் உணர்வீர்கள். அரசும் கல்லூரிகளும் சர்வதேச மாணவர்களை வியாபாரமாக மாற்றி விட்டன.

இந்தியா தற்போது வளர்ந்து வருகிறது; வேலை வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. புத்திசாலித்தனமாக செயல்பட்டால், உங்கள் மன நலத்தையும், குடும்பத்தையும், மதிப்பையும் இழக்காமல் இந்தியாவிலேயே ஒரு சிறந்த வாழ்க்கையை வாழலாம்.
மேற்கத்திய நாடுகள் தரும் வாழ்க்கை ஒரு மாயை. நீங்கள் இங்கே வந்தவுடன் உங்கள் மூளை கழுவப்படும் என்பதை உணர்வீர்கள். இந்த தந்திரத்தில் யாரும் விழ வேண்டாம். இந்தியாவிலேயே நிம்மதியாக வாழுங்கள். உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள். சொந்த நாட்டில் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழுங்கள்” என்று பதிவு செய்துள்ளார்.

இந்த பதிவில் உள்ள தகவல்கள் எந்த அளவுக்கு உண்மையானவை என்று தெரியவில்லை. ஆனால், ஏராளமான சமூக வலைதள பயனாளிகள் இந்த கருத்தை ஆதரித்து வருகின்றனர். “என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்? ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?” என்ற கருத்துகளும் பகிரப்பட்டுள்ளன.