பெஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை அவர்கள் மதம் என்னவென்று கேட்டு விட்டு சுட்டுக்கொன்ற பயங்கரவாத தாக்குதல் குறித்து கண்டு கொதித்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், “ஹிந்துக்கள் யாரும் இப்படி ஒரு கொடூர செயலை செய்யமாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
கடுமையான வார்த்தைகளில் பேசிய அவர், “எதிரியை வெறுப்பதும், விரோதம் காட்டுவதும் நம் இயல்பு அல்ல. ஆனால், எதையும் சகித்து கொண்டு இருப்பவர்களும் அல்ல. நம்மிடம் உள்ள சக்தியை அவ்வப்போது வெளிப்படுத்த வேண்டும். இதனால் உலகத்துக்கு ஒரு செய்தி என்னவெனில் எதிர்களிடம் மட்டுமல்ல, நம்மிடமும் சக்தி உள்ளது. இது மதங்களுக்கு இடையிலான போரில்லை, நன்மை மற்றும் தீமைக்கிடையிலான போராகும்,” என்றார்.
“காஷ்மீரில் தீவிரவாதிகள் செய்த செயலைக் கண்டு அனைவரும் கொந்தளிக்கின்றனர். மதம் கேட்ட பிறகே மக்கள் கொல்லப்பட்டனர். ஹிந்துக்கள் ஒருபோதும் இப்படிச் செய்வதில்லை. இந்த சம்பவத்தைக் கண்டு நாங்கள் மிகவும் துயரத்தில் உள்ளோம்,” என்று அவர் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை ஜம்மு மற்றும் காஷ்மீரில் 5 முதல் 6 பயங்கரவாதிகள் சேர்ந்து, உலகப்புகழ்பெற்ற பயணிகள் இடமாகிய பகல் காம் பகுதியில், இயற்கையின் அழகைப் பார்க்க வந்த நிரபராத பொதுமக்களை குறிவைத்து, சமீபத்திய மிகப்பெரிய தாக்குதல்களில் ஒன்றை நடத்தியுள்ளனர்.
பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலால் இந்துக்கள் மற்றும் இந்து அமைப்புகள் கடும் கோபத்தில் உள்ளன. இதுவரை பயங்கரவாதிகள் இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் ராணுவ அமைப்புகள் மீதுதான் தாக்குதல் நடத்தி உள்ளது. முதல் முறையாக அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டு பேசாமல் இருக்க முடியாது என்றும் இதற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
பல இந்து அமைப்புகள் இந்தியாவிடம் வாலாட்டினால் பாகிஸ்தான் என்ற நாடே உலக வரைபடத்தில் இருக்காது என்றும் காணாமல் போய்விடும் என்று எச்சரித்து வருகின்றன. பாகிஸ்தான் தொடர்ந்து பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு கொடுப்பதன் மூலம் இந்தியாவுக்கு தொல்லை கொடுப்பது மட்டுமின்றி பாகிஸ்தானும் வளராமல் உள்ளது என்றும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுத்த எந்த நாடும் முன்னேறியதாக வரலாறு இல்லை என்றும் இந்து அமைப்புகள் கூறி வருகின்றன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
