வரலாற்றுச் சிறப்புமிக்க கிராண்ட் ட்ரங்க் சாலை வழித்தடத்தில் பாகிஸ்தானின் பஞ்சாப் முதல் பங்களாதேஷ் எல்லை வரையிலும் நீண்டு செல்கிறது. இந்த நீண்ட சாலை தற்போது இந்தியாவிற்கு ஒரு முக்கியமான மற்றும் சிக்கலான உள்நாட்டு பாதுகாப்பு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. உளவுத்துறை நிபுணர்கள் இந்த வழித்தடத்தை பயங்கரவாதிகள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கான மையமாக கருதுகின்றனர்.
ஜி.டி. சாலை, பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ ஆதரவுடன் செயல்படும் குழுக்களையும், வங்காளதேசத்தின் தீவிரவாத அமைப்புகளையும் இணைக்கும் ஒரு முக்கிய பாலமாக செயல்படுகிறது. இது பயங்கரவாதிகளை, ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை இந்தியாவின் மத்திய பகுதிகளான உத்தரப் பிரதேசம், ஹரியானா, டெல்லி மற்றும் மேற்கு வங்கம் போன்ற முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களுக்குள் கொண்டு செல்ல உதவுகிறது. பயங்கரவாத சதித்திட்டங்களை விரைவாக செயல்படுத்தவும், இந்த மாநிலங்களில் உள்ளூர் ஆதரவாளர்களை திரட்டவும் இந்த வழித்தடம் ஒரு பயங்கரவாதத்தின் நெடுஞ்சாலையாகவே பயன்படுத்தப்படுகிறது.
ஜி.டி. சாலையிலும் அதனை சுற்றியுள்ள ரயில் நிலையங்கள், பாலங்கள் மற்றும் முக்கிய சாலைகளில் சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த ஆக்கிரமிப்புகளில் பல சட்டவிரோத மத பள்ளிகள் அல்லது வழிபாட்டு தலங்களாக உள்ளன. டெல்லியில் உள்ள அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்களீல், இந்த சட்டவிரோத கட்டமைப்புகள் பெரும்பாலும் ஆயுதங்களை மறைக்கவும், பயங்கரவாத நடவடிக்கைகளை திட்டமிடவும், அல்லது பயிற்சி வழங்கவும் பயன்படுகின்றன. இதனால், இவை காவல்துறை கண்காணிப்புக்கு உட்படாத ரகசியத் தளங்களாகவே செயல்படுகின்றன.
மேற்குவங்கம் மற்றும் அஸ்ஸாம் வழியாக சட்டவிரோதமாக ஊடுருவும் பங்களாதேஷ் குடியேறிகள் மற்றும் ரோஹிங்கியாக்கள், இந்த சாலை வழித்தடத்தில் உள்ள சட்டவிரோத குடியிருப்புகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். இவர்கள் பலர் குற்ற செயல்களிலும், நாட்டின் தீவிரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதுடன், அரசின் இலவச சலுகைகளையும் பயன்படுத்தி இந்தியாவின் வளங்களுக்கு பெரும் சுமையாக உள்ளனர். இந்த சட்டவிரோத மக்கள் தொகையானது நாட்டின் சட்டம்-ஒழுங்கு மற்றும் சமூக அமைதிக்குப் பெரும் சவாலாக உள்ளது.
ஜி.டி. சாலை பகுதியில் உள்ள கல்வி நிறுவனங்களின் உதவியுடன், படித்த மற்றும் தொழில் ரீதியாகத் தகுதி வாய்ந்த இளைஞர்கள் தீவிரவாதிகளாக மாற்றப்படுகின்றனர். டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் பிடிபட்ட மருத்துவர்கள், பொறியாளர்கள் போன்றவர்கள், தங்கள் பண பலத்தைபயன்படுத்தி, ரைசின் போன்ற உயிரியல் நச்சுக்களை தயாரித்தல் மற்றும் AK-47 போன்ற நவீன ஆயுதங்களை பயன்படுத்துதல் போன்ற அதிநவீன பயங்கரவாத சதித்திட்டங்களை வடிவமைக்கின்றனர். ஜி.டி. சாலை வழித்தடத்தில் செயல்படும் பயங்கரவாதக்குழுக்கள் நிதி மற்றும் தொழில்நுட்ப ரீதியில் மிகவும் சீர்திருத்தப்பட்டவை என்பதைக் காட்டுகிறது.
பயங்கரவாத ஊடுருவலுக்கான இந்த ஜி.டி. சாலை வழித்தடத்தை நிரந்தரமாக சுத்தம் செய்ய மத்திய மற்றும் மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதில், சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுதல், போலி ஆவணங்களை தடை செய்தல் மற்றும் சட்டவிரோத கட்டமைப்புகளை அகற்றுதல் ஆகியவை அடங்கும். மேலும், காவல்துறை செயற்கை நுண்ணறிவுடன் கூடிய சிசிடிவி வலையமைப்பை அமைத்து, சந்தேகத்திற்கிடமான வாகனங்கள், நபர்கள் மற்றும் நிதி பரிமாற்றங்களை உடனடியாக கண்காணிக்கும் திறனை வளர்க்க வேண்டும்.
சிறு தவறுகள் அல்லது குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். இதுபோன்ற குற்றங்கள் பின்னர் பெரிய பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு வழிவகுப்பதை தடுக்க, தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம். இந்த ஜி.டி. சாலை வழித்தட பிரச்சினையை முழுமையாக சுத்தம் செய்வதும், அதன் மூலம் நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் இந்தியாவின் உடனடி தேவையாகும். இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள, அரசு நிறுவனங்கள் உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
