மகா கும்பமேளா மூலம் புது வியாபார யுக்தியை செயல்படுத்திய Fevicol… அட.. இது சூப்பரா இருக்கே…

உத்திரபிரதேச மாநிலத்தில் வெகு விமர்சையாக நடந்து வரும் திருவிழா தான் மகா கும்பமேளா. இந்துக்களின் மிகப்பெரிய பண்டிகையான இது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இந்த நேரத்தில் திரிவேணி சங்கமத்தில் கங்கையில் புனித…

fevicol

உத்திரபிரதேச மாநிலத்தில் வெகு விமர்சையாக நடந்து வரும் திருவிழா தான் மகா கும்பமேளா. இந்துக்களின் மிகப்பெரிய பண்டிகையான இது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. இந்த நேரத்தில் திரிவேணி சங்கமத்தில் கங்கையில் புனித நீராடினால் பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இந்த கும்பமேளா திருவிழா முடிவதற்குள் கிட்டத்தட்ட 40 கோடி மக்கள் அங்கு கூடுவார்கள் என்று கூறப்படுகிறது. நாள் ஒன்றுக்கு எட்டு கோடி மக்கள் வரை கூடுவார்கள். இதனால் கூட்ட நெரிசல் அதிகமாக இருக்கும். இந்த நேரத்தில் பல வியாபாரமும் சூடு பிடிக்கும். இந்த கூட்ட நெரிசலால் சிறியவர் முதல் பெரியவர் வரை தொலைந்து போக வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.

இந்த ஒரு விஷயத்தை பயன்படுத்திக் கொண்ட Fevicol நிறுவனம் புதுவித வியாபார யுக்தியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அது என்னவென்றால் ஒருவருக்கு ஒருவர் இந்த கூட்ட நெரிசலில் தொலையாமல் இருக்க இரண்டு மூன்று நான்கு என்று ஒட்டி தைக்கப்பட்ட டி-ஷர்ட்களை தனது கம்பெனியின் பெயர் பொறிக்கப்பட்டு விற்பனை செய்து வருகிறது Fevicol நிறுவனம். இதற்கு அதிக வரவேற்பு கிடைத்து இருக்கிறது. இதன் மூலம் அவர்களின் வியாபாரமும் பெருகி இருக்கிறது.