மன அழுத்தம் இன்று பலருக்கும் தலையாய பிரச்சனையாக இருக்கிறது. பெரும்பாலும் அலுவலக வேலை செய்பவர்களுக்கு இது அதிகளவில் வருகிறது. மேலதிகாரிகளின் நெருக்கடி, பணிச்சுமை என பலரும் அவதிப்படுவர். இதனால் சிலர் தற்கொலை செய்யும் அளவுக்குக் கூட போய்விடுகின்றனர்.
அதே போல வீடுகளில் கணவன், மனைவி பிரச்சனை, குழந்தைகள் சொல் பேச்சைக் கேட்காமை, அண்டை வீட்டார் மற்றும் உறவினர்களுடன் பிரச்சனை, சுமூக உறவு இல்லாமை என பல சிக்கல்கள் மன அழுத்தத்தைப் பற்றி எரியச் செய்கின்றன. இதனால் தினமும் ஏதாவது ஒருவகையில் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இதற்கு என்னதான் வழி? இதில் இருந்து மீள்வதற்கு நாம் செய்ய வேண்டியவை என்ன? வாங்க அருமையான அந்த 10 வழிகளைப் பார்க்கலாம்.
ஒரே இடத்தில் வெகு நேரம் இருக்காமல் உடலை இயக்கிக் கொண்டே இருங்க. சத்தான உணவுகளைச் சேர்த்துக் கொள்ளுங்க. மனதை ஒருமைப்படுத்துங்க. அதிகமாக சிரியுங்கள். அதற்காகத் தனியாக இருந்து சிரிக்க வேண்டாம். நண்பர்கள், அலுவலர்கள், உறவினர்கள் என பார்க்கும்போது நகைச்சுவை கலந்து பேசி சிரியுங்கள். வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும் அல்லவா.
புதுமையான செயல்களில் ஈடுபடுங்கள். இனிமையான பாடல்களைக் கேளுங்கள். அல்லது புத்தகம் படிங்க. வெளியே சென்று நடைபயிற்சி செய்யுங்க. தினமும் காலையில் மூச்சுப்பயிற்சி செய்யுங்க. அமைதியாக 10 நிமிடம் தினமும் தியானம் செய்யுங்க. உங்களுக்கு எப்போதாவது நடனம் ஆடணும்னு தோணுச்சுன்னா வெட்கப்படாமல் தனியாகவே ஆடுங்க. இதை உங்க அறையில் கூடச் செய்யலாம். இயற்கை எவ்வளவு அழகானது. அதன் அமைதியை ரசித்து அனுபவியுங்கள்.