’எங்கிருந்தாலும் வாழ்க’.. முன்னாள் காதலியின் திருமணத்தில் கலந்து கொண்ட வாலிபர்.. எமோஷனல் பதிவு..!

  டெல்லியை சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது சமூக வலைதளத்தில் முன்னாள் காதலியின் திருமணத்தில் கலந்து கொண்ட அனுபவத்தை எமோஷனலாக பகிர்ந்துள்ளார். அந்த பதிவுக்கு ஆயிரக்கணக்கான லைக்குகள் குவிந்து வருகின்றன. டெல்லியை சேர்ந்த ஒரு…

marriage 3

 

டெல்லியை சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது சமூக வலைதளத்தில் முன்னாள் காதலியின் திருமணத்தில் கலந்து கொண்ட அனுபவத்தை எமோஷனலாக பகிர்ந்துள்ளார். அந்த பதிவுக்கு ஆயிரக்கணக்கான லைக்குகள் குவிந்து வருகின்றன.

டெல்லியை சேர்ந்த ஒரு வாலிபர், தனது காதலியுடன் எட்டு ஆண்டுகள் உறவில் இருந்ததாகவும், கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் வேலை இழந்ததால், காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார். இதனால், இருவரும் பேசிக் கொண்டு பரஸ்பரம் பிரிந்து விட்டதாகவும் கூறியுள்ளார்.

reddit

தற்போது, முன்னாள் காதலியின் திருமணம் நடந்ததை அறிந்த பிறகு, கடைசியாக ஒருமுறை பார்க்கவேண்டும் என்ற எண்ணத்துடன் அவரது திருமணத்தில் கலந்து கொண்டதாக தெரிவித்துள்ளார். திருமண மேடையில், அவள் மிகவும் அழகாக இருந்ததாகவும், கடவுள் அவளை ஆசீர்வதித்து எல்லா மகிழ்ச்சியையும் வழங்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்ததாகவும் கூறியுள்ளார்.

தன் முன்னாள் காதலி வேறொருவருடன் திருமணமானாலும், அவள் நல்லதாக இருக்க வேண்டும் என்ற மனப்போக்குடன் வாழ்த்திய அந்த நல்ல உள்ளத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். “உங்கள் நல்ல மனசுக்காக, நிச்சயம் உங்கள் வாழ்க்கையிலும் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கும் ஒரு அழகான பெண் கிடைக்கும்” என பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.