கும்பமேளாவில் தொலைந்து போனவர்கள் மட்டும் 54,000 பேர்.. மீண்டும் இணைந்தவர்கள் எத்தனை பேர்?

  உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற கும்பமேளாவில் 54,000 பேர் தொலைந்ததாக கணக்கெடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டு குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளதாக உத்திரப்பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் பிரயாக்ராக்…

kumbamela

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற கும்பமேளாவில் 54,000 பேர் தொலைந்ததாக கணக்கெடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டு குடும்பத்தினருடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளதாக உத்திரப்பிரதேச மாநில அரசு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் பிரயாக்ராக் நகருக்கு கும்பமேளா நிகழ்ச்சியை காண வந்திருந்தனர். சுமார் 66 கோடி பேர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கும்பமேளா நடைபெற்ற காலத்தில் மொத்தம் 54,357 பேர் தொலைந்ததாக புகார் அளிக்கப்பட்டது. ஆனால், காவல்துறையின் தீவிர முயற்சியால் கிட்டத்தட்ட அனைவரும் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களின் குடும்பத்தினருடன் இணைக்கப்பட்டதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

மீண்டும் இணைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள், அதன்பிறகு குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் திட்டமிட்ட நடவடிக்கையின் காரணமாக, காவல்துறையினர் தொலைந்த அனைவரையும் கண்டுபிடித்து அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர். இது ஒரு மிகப்பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

கும்பமேளாவில் தொலைந்தவர்கள் இந்தியர்களுக்கு மட்டுமல்லாமல், நேபாளத்தை சேர்ந்தவர்களும் அடங்குவார்கள். அவர்களும் கண்டுபிடிக்கப்பட்டு, நேபாளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த கும்பமேளாவில் சிறந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததற்காக வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.