மீண்டும் பரவி வரும் கொரோனா வைரஸ்.. மும்பையில் 14 வயது சிறுவன் உள்பட 2 பேர் மரணம்.. மீண்டும் லாக்டவுனா?

  கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியது என்பது நாம் அறிந்ததே. லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு, பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. மேலும், உலகின்…

corona death relief fund

 

கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியது என்பது நாம் அறிந்ததே. லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு, பல உயிரிழப்புகள் ஏற்பட்டன. மேலும், உலகின் பல நாடுகளில் பொருளாதாரம் மிக மோசமான நிலையை அடைந்தது.

லாக்டவுன் காரணமாக கோடிக்கணக்கான மக்கள் அடிப்படை தேவைகளையே பெற முடியாமல் திண்டாட்டம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போதுதான் கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொரோனா வைரஸிலிருந்து மக்கள் முழுமையாக மீண்டு, நிம்மதியாக வாழத் தொடங்கியிருக்கிறார்கள். இந்நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி, மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் இந்த நோய் பரவியதாக கூறப்பட்டது. தற்போது இந்தியாவிலும் கொஞ்சம் கொஞ்சமாக பரவி வருவதாகவும், மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

கேரளாவில் சுமார் 68 பேர் வரை இந்த நோயின் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தமிழகத்திலும் சிலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்றாலும், நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் மத்திய, மாநில சுகாதாரத்துறைகள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், மும்பையில் உள்ள கிட் ஹெட்வர்ட் மெமோரியல் மருத்துவமனையில், கடந்த வாரம் கொரோனா வைரஸ் பாதிப்பால் இருவர் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் இருவரும் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த மரணங்கள் கொரோனா வைரஸ் காரணமாகவே ஏற்பட்டதல்ல என்றும், அவர்களுக்கு ஏற்கனவே இருந்த உடல் நலக்குறைவுகளே காரணம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் ஒருவர் 14 வயது சிறுவன். இவருக்கு சிறுநீரக செயலிழப்பு நோய் ஏற்பட்டிருந்தது. அதனால்தான் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மற்றொரு நபர் 54 வயது ஆண். இவர் புற்றுநோய் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பொதுமக்கள் வீணாக அச்சம் அடையத் தேவையில்லை என்றும், கொரோனா வைரஸ் மீண்டும் பரவாமல் இருக்க தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.