இந்த ஒப்படைப்பு அமைதியாகவும், நிலைநிறுத்தப்பட்ட நடைமுறைகளைப் பின்பற்றி நடந்ததாக பிஎஸ்எஃப் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
182வது படைபிரிவை சேர்ந்த பிஎஸ்எப் கான்ஸ்டபிள் புர்ணம் குமார் ஷா, தனது பணியில் இருந்தபோது பஞ்சாபின் பெரோஸ்பூர் பகுதியில், மதியம் 11.50 மணி அளவில் தவறுதலாக பாகிஸ்தான் எல்லையை கடந்தார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு அடுத்த நாள் இந்த சம்பவம் நடந்த நிலையில், பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் அவரை கைது செய்தனர்.
அதன்பின் பிஎஸ்எப் ஜவான் புர்ணம் குமார் ஷாவை இந்தியா கொண்டு வர பலதரப்பு முயற்சிகள் எடுக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் தாயகம் திரும்பியுள்ளார்.
பிஎஸ்எப் ஜவான் புர்ணம் குமார் ஷாவின் குடும்பத்தினர், அவரை பாதுகாப்பாக இந்தியா திரும்ப வைத்ததற்காக மத்திய அரசுக்கு நன்றியுடன் தெரிவித்தனர். “எங்களுக்கு மிகப்பெரிய நிம்மதி,” என கூறினர்.
“கடந்த 22 நாட்களாக எங்கள் மகனின் நலன் குறித்து மிகவும் கவலையில் இருந்தோம். இன்று நாங்கள் மிக மகிழ்ச்சி அடைகிறோம்,” என்று புர்ணம் குமார் ஷாவின் தாயார் தெரிவித்தார்.