வெளிய சிரிப்பு, ஆனா மனசுக்குள்ள அவ்ளோ வேதனை.. நெட்டிசன்களை கண்ணீரில் மூழ்கடித்த பெண் ஓட்டுநரின் கதை..

Published:

இங்கு நம்மைச் சுற்றி உள்ள ஒவ்வொரு மனிதருக்கும் ஒவ்வொரு கதைகள் இருக்கும் அதே வேளையில், அவற்றில் சில விஷயங்கள் நம்மை வெகுவாக பாதிக்கும் அளவுக்கு அமைந்திருக்கும். நமது வாழ்க்கை கடினமாக உள்ளது என்று நாம் நினைக்கும் போது நம்மை விட வலிகள் நிறைந்த வாழ்க்கையை நாம் கடக்கும் போது இதெல்லாம் என்ன கஷ்டம் என நமக்கே தோன்றும் அளவுக்கு அந்த விஷயங்கள் அமைந்திருக்கும்.

அப்படி ஒரு சூழலில் தற்போது பெண் கேப் ஓட்டுனர் ஒருவரை பற்றிய கதையைத் தான் தற்போது பார்க்கப் போகிறோம். சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட தலைநகரங்களில் அதிகமாக இருந்து வருகின்றனர். மக்களுக்கான கார் பயன்பாடும் அதிகமாக இருப்பதால் பெரு நகரங்களில் நிறைய தெருக்களில் செயல்படுவதை பார்க்க முடியும்.

இதனிடையே ஓஜாஸ் தேசாய் என்ற நபர் ஒருவர் சமீபத்தில் அகமதாபாத் பகுதியில் ஓலா கேப் ஒன்றை புக் செய்துள்ளார். ரயில் நிலையம் செல்வதற்காக கேப் புக் செய்ய அதில் அர்ச்சனா பாட்டில் என ஒரு பெண் ஓட்டுநரின் பெயர் வந்ததை பார்த்து ஆச்சரியமடைந்துள்ளார். பொதுவாக ஆட்டோவை தான் அதிகம் பெண்கள் இயக்குவது தெரிந்த ஓஜாஸ் தேசாய்க்கு ஒரு பெண் கேப் ஓட்டுநராக இருப்பதை பார்த்து வியந்து போயுள்ளார் ஓஜாஸ் தேசாய்.

அதே போல அர்ச்சனா பாட்டில் டிராபிக் நெரிசலுக்கு மத்தியில் சிறப்பாக வண்டி ஓட்டிய விதமும் அவரை அசர வைத்துள்ளது. மேலும் அர்ச்சனா பாட்டில் என்ற அந்த பெண் ஆறு மாதங்களுக்கு முன்பாக சைக்கிள் கூட ஓட்ட தெரியாமல் இருந்ததாகவும் அதற்கு பின்னர் கார் ஓட்ட கற்றுக் கொண்டு இப்போது தேர்ந்த ஓட்டுநராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அர்ச்சனா பாட்டிலின் கணவர் ஓலா டிரைவராக இருந்து வந்த சூழலில் உடல்நல பிரச்சனைகள் உருவானதால் அவரால் தொடர்ந்து வண்டி ஓட்ட முடியவில்லை. இதனால் கேப் வாங்கிய கடன் தலைக்கு மேல் இருக்க அவரது கணவரிடத்தில் இருந்து அவரது மனைவி அர்ச்சனா பாட்டில் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டு குடும்பத்தையும் நடத்தி வருகிறார்.

இது தொடர்பான செய்தியை பகிர்ந்த ஓஜாஸ் தேசாய் என்ற நபர், ஒரு பெண்ணின் பவர் என்ன என்பதை தெரிவிப்பதற்காக இந்த செய்தியை பகிரவில்லை என்றும் கெட்ட நேரத்தை தோல்வியாக பார்க்காத ஒரு நல்ல மனிதரை சந்திக்க நேர்ந்தது பற்றி தான் எழுதி உள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். குடும்ப பாரத்திற்காக கணவரின் இடத்தில் இருந்து கேப் ஓட்டுனரின் இந்த அர்ப்பணிப்பு பலரையும் சபாஷ் போட வைத்துள்ளது.

மேலும் உங்களுக்காக...