இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐயின் யுபிஐ சேவைகள் தொழில்நுட்ப பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன. இதனால் நாடு முழுவதும் பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எஸ்பிஐ வங்கியின் யுபிஐ சேவைகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய முயன்ற பலர் பண பரிவர்த்தனையில் தோல்வியடைந்துள்ளதாக புகார் அளித்துள்ளனர். இதன் காரணமாக Google Pay, PhonePe, Paytm போன்ற செயலிகள் மூலம் எஸ்பிஐ வங்கி கணக்கை பயன்படுத்தி பணம் பரிமாறும் பயனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து எஸ்பிஐ, தனது X பதிவில், “யுபிஐ சேவையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர்கள் யுபிஐ சேவைகளை பயன்படுத்துவதில் சிக்கலை எதிர்கொள்ளலாம். விரைவில் சேவைகள் மீண்டும் இயங்கும்.” என்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து பணப்பரிவர்த்தனையில் இடையீடு ஏற்படாமல் இருக்க, யுபிஐ லைட் சேவையைப் பயன்படுத்தும்படி வாடிக்கையாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.
இந்தியாவில் மிக அதிக அளவில் யூபிஐ சேவையை பயன்படுத்துபவர்கள் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் என்பதால், இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே, ட்விட்டர் முடங்கியதால் சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது எஸ்பிஐ யூபிஐ சேவையும் அதே சிக்கலை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.