ஏர்டெல் – ஸ்பேஸ் எக்ஸ் ஒப்பந்தமான சில மணி நேரத்தில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் எலான் மஸ்க் நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவில் ஸ்டார்லிங்க் இன்டர்நெட் சேவைகளை கொண்டு வர ஒப்பந்தம் கையெழுத்திட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று பார்தி ஏர்டெல் இதேபோன்ற ஒப்பந்தத்தை அறிவித்த நிலையில் அதேபோன்ற ஒரு ஒப்பந்தத்தை ஜியோவும் செய்துள்ளது. ஆனால் ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவைகளை வழங்க தேவையான அரசு அனுமதிகளை பெறுவதை பொறுத்தே அமையும்.
முன்னதாக ஜியோ மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்கள் செயற்கைக்கோள் தொடர்பு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் வேறுபட்ட கருத்துக்களை கொண்டிருந்தன. ஜியோ நிறுவனம் ஸ்பெக்ட்ரத்தை ஏலத்தின் மூலம் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமோ நிர்வாக நடவடிக்கைகள் மூலம் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது. இந்த விவகாரத்தில் இந்திய அரசு நிர்வாக ஒதுக்கீடு வழியை தேர்ந்தெடுத்துள்ளது.
இந்த நிலையில் தான் ஜியோ – ஸ்பேஸ் எக்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜியோ மற்றும் ஸ்பேஸ்எக்ஸ், ஸ்டார்லிங்க் சேவைகளை ஜியோவின் வாடிக்கையாளர்களுக்கு விரிவுபடுத்தவும், ஸ்பேஸ்எக்ஸ் சேவைகளை நீட்டிக்கவும் செய்ய வாய்ப்பு உள்ளது. ஸ்டார்லிங் பிளான்களை ஜியோவின் சில்லரை அவுட்லெட்கள் மற்றும் ஆன்லைன் தளங்கள் மூலம் விற்பனை செய்யும்.
இதுகுறித்து ஜியோ வெளியிட்ட அறிக்கையில், ‘ஜியோ-ஸ்பேஸ் எக்ஸ் ஒப்பந்தத்தின் மூலம், உலகின் மிகப்பெரிய டேட்டா போக்குவரத்து வழங்குனராக ஜியோவும், மீதி உலகின் முன்னணி குறைந்த நில உயர செயற்கைக்கோள் வழங்குனராக ஸ்பேஸ் எக்ஸ் உருவாகியுள்ளது. இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவின் எட்ட முடியாத பகுதிகளிலும் நம்பகமான பிராட்பேண்ட் சேவைகளை வழங்கும்.
ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு ஸ்டார்லிங்க் சாதனங்களை வழங்குவதுடன், உடனடி நிறுவல் மற்றும் செயல்படுத்தல் பணிகளை செய்து கொடுக்கும். மேலும் ஜியோ ஏர்ஃபைபர் மற்றும் ஜியோ ஃபைபர் சேவைகளை ஸ்டார்லிங்க் சேவை மேலும் விரிவாக்கப்படும்.
https://x.com/RIL_Updates/status/1899661139455431123