உலகத்தில் புதுவிதமாக பல விதமாக புது புது நோய்கள் அன்றாடம் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகளையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்து கொண்டு இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது இந்தியாவில் ஒரு புது வித நோய் பரவிக்கொண்டிருக்கிறது. அதைப்பற்றி இனி காண்போம்.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் Guilliain Barre Syndrome என்ற நோய் பரவி வருகிறது. தற்போது நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நோய் நரம்பு மண்டலத்தை பாதித்து உறுப்புகளை செயலிழக்க செய்கிறது என்று கூறுகிறார்கள். இது ஒரு தொற்று நோய் இல்லை என்பதால் மக்கள் சற்று நிம்மதியாக இருக்கிறார்கள்.
இந்த Guilliain Barre Syndrome நோய் ஒருவருக்கு ஏற்பட்டு விட்டால் காலில் இருந்து ஆரம்பித்து இடுப்பு கை கண்கள் என ஒவ்வொரு உறுப்புகளும் செயலிழந்து போகும். உங்களுக்கு கண்களை சரியாக மூடிக் திறக்க முடியாவிட்டாலும் கை கால்கள் மரத்து போதல் போன்ற நிலைமை ஏற்பட்டாலும் உடனே மருத்துவரை அணுகி பரிசோதித்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்கள்.
இந்த நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்னவென்று பார்க்கப் போனால் சுகாதாரம் இல்லாத தண்ணீரை பருகுவது, சரியாக வேக வைக்காத அசைவ உணவுகளை சாப்பிடுவது போன்றவற்றால் இந்த நோய் பரவுகிறது. எப்போதும் நாம் சுத்தமாக இருந்தால் எந்த ஒரு நோயும் நம்மை அண்டாது என்பது நிதர்சனமான உண்மை.