விரைவில் கருத்தரிக்க விரும்பும் தம்பதியரா!? அப்ப இந்த வத்தக்குழம்பை சாப்பிடுங்க!!

By Staff

Published:

மணத்தக்காளி கீரை மருத்துவ குணம் நிறைந்தது. வாய்ப்புண், வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும் என எல்லோருக்குமே தெரியும். அதனால், காலையில் வெறும் வயிற்றில் மணத்தக்காளி பழத்தினை சாப்பிட்டு வர நல்ல குணம் தெரியும் என பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால், நிறைய பேருக்கு தெரியாத விசயம் மணத்தக்காளி கீரை, விதை, பழத்தினை தொடர்ந்து சாப்பிட்டு வர கருப்பை பலப்பட்டு விரைவில் கருத்தரிக்கும்.

da21e0b3651ee5d9845813ffccf566a3

தேவையான பொருட்கள் :

மணத்தக்காளி வற்றல் – 100 கிராம்

வெங்காயம் – 100 கிராம்

தக்காளி – 2

குழம்பு மிளகாய் தூள் – 3 டீஸ்பூ ன்

பூண்டு விழுது – 2 ஸ்பூ ன்

கடுகு – கால் டீஸ்பூ ன்

வெந்தயம் – கால் டீஸ்பூன்

கடலைப்பருப்பு – கால் டீஸ்பூன்

மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை

கறிவேப்பிலை – சிறிதளவு

புளி – எலுமிச்சைப்பழ அளவு

உப்பு – தேவையான அளவு

நல்லெண்ணெய் – தேவையான அளவு

79d856e86162b91f924e34b5befcc11d

செய்முறை :

 வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு விழுது ஆகியவற்றைப் போட்டு தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.  குழம்பு மிளகாய் பொடியை சேர்த்துக் கிளறவும். பின்பு அதில் கரைத்து வடிகட்டி வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.  குழம்பு நன்கு கொதித்து, எண்ணெய் பிரிந்து கெட்டியான பதம் வந்தவுடன் , மணத்தக்காளி வத்தலை எண்ணெயில் வறுத்து குழம்பி சேர்க்கவும். இரண்டு நிமிசம் கொதித்து முடித்ததும் அடுப்பை அணைத்து கறிவேப்பிலை சேர்த்து இறக்கினால் சுவையான மணத்தக்காளி வற்றல் குழம்பு தயார். 

Leave a Comment