கையெடுத்து கும்பிட்ட சென்னை போலீஸை விமர்சித்த தெலுங்கு இயக்குனர்

By Staff

Published:

பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா. இவர் நிறைய போலீஸ் படங்கள் இயக்கி இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒரு விசயம். அதில் போலீசை ரஃப் அண்ட் டஃப் அதிகாரியாகத்தான் இவர் காண்பித்திருப்பார்.

d564fea4ed337d4f2cca2fcf133e787f-1

இவரின் பழக்கம் என்னவென்றால் சமூக வலைதளத்திலும் நேரிலும் பேசும்போது எழுதும்போதும் அதிரடியாக ஏதாவது கருத்துக்களை கூரி சர்ச்சையில் சிக்கி கொள்வார்.

அந்த வகையில் கொரோனா வைரஸ் 21 நாள் தடைக்கு வெளியில் சுற்றி திரிந்தவர்களை சென்னை போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ரஷீத் என்பவர் தயவு செய்து வீட்டை விட்டு வெளியில் வராதிங்க என கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவத்தை அனைத்து தொலைக்காட்சிகளிலும் காட்டினர். உடனே பைக்கில் வந்த இளைஞர் அவர் காலில் விழுந்து கும்பிட போனார். இது டிவியிலும் சமூக வலைதளத்திலும் வைரலான நிலையில், இப்படி எல்லாம் செய்வது மிகவும் தவறு இப்படி செய்வதால் பொதுமக்கள் உங்கள் தலையில் ஏறி அமர்வார்கள் என கூறி இருக்கிறார் ராம்கோபால்வர்மா.

Leave a Comment