அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் உணவையே மருந்து என்றனர். அவர்கள் சாப்பிடும் உணவு ஒவ்வொன்றும் நமக்கு சத்துக்கள் நிறைந்;ததாகவே உள்ளன. அதனால்தான் அக்காலத்தில் உள்ள நம் தாத்தா பாட்டிமார்கள் எல்லாம் 100 வயதுக்கும் மேலாக திடமாக வாழ்ந்து வந்தனர். ஆனால் இது காலப்போக்கில் விளைச்சலை அதிகரிக்க வேண்டும் என செயற்கை உரங்கள், கலப்பு செடிகள் என பல புதுமைகளைப் புகுத்தி தரமற்ற உணவுப்பொருள்கள் தான் நமக்குக் கிடைக்கின்றன.
இதனால் பழையகாலத்தில் உள்ள சத்துக்கள் நமக்குக் கிடைப்பதில்லை. பலவித நோய்களுக்கு ஆளாகி வருகிறோம். அதுமட்டும் அல்லாமல் உணவுப்பழக்கமும் மாறிப்போனது. பாஸ்ட் ஃபுட் வந்து நம் உடலை வெகுவாகப் பாதித்து விட்டது. நமக்கு பலவிதமான புதுப்புது வியாதிகள் வர ஆரம்பித்து விட்டன.
இதில் இருந்து மீள என்னதான் வழி என்றால் மீண்டும் பழைய காலத்துக்குத் திரும்புவோம். தினம் நாம் சாப்பிடும் காய்கறிகளிலேயே ஏராளமான நோய்கள் குணமாகி விடுகின்றன. அவற்றில் எதை சாப்பிட்டால் எந்தெந்த நோய்கள் எல்லாம் குணமாகின்றன என்று பார்ப்போமா…
என்றும் 16 வயது வாழ ஓர் நெல்லிக்கனி. இதயத்தை வலுப்படுத்த செம்பருத்திப் பூ. மூட்டு வலியை போக்க முடக்கத்தான் கீரை. இருமல், மூக்கடைப்பு குணமாக்க கற்பூரவல்லி (ஓமவல்லி). நீரழிவு நோய் குணமாக அரைக்கீரை. வாய்ப்புண், குடல்புண்களை குணமாக மணத்தக்காளி கீரை.
உடலை பொன்னிறமாக மாற்ற பொன்னாங்கண்ணி கீரை. மாரடைப்பு நீங்க மாதுளம் பழம். ரத்தத்தை சுத்தமாக்க அருகம்புல். கான்சர் நோயை குணமாக்க சீதா பழம். மூளை வலிமைக்கு ஓர் பப்பாளி பழம். நீரிழிவு நோயை குணமாக்க முள்ளங்கி. வாயு தொல்லையிலிருந்து விடுபட வெந்தயக் கீரை.
நீரிழிவு நோயை குணமாக்க வில்வம். ரத்த அழுத்தத்தை குணமாக்க துளசி. மார்பு சளி நீங்க சுண்டைக்காய். சளி, ஆஸ்துமாவுக்கு ஆடாதொடை. ஞாபகசக்தியை கொடுக்க வல்லாரை கீரை. ரத்த அழுத்தத்தை குணமாக்க பசலைக்கீரை. ரத்த சோகையை நீக்க பீட்ரூட். ஜீரண சக்தியை அதிகப்படுத்த அன்னாசி பழம்.
முடி நரைக்காமல் இருக்க கல்யாண முருங்கை (முள் முருங்கை), கண் பார்வைக்கு கேரட் + மல்லிகீரை + தேங்காய் ஜூஸ். மார்புசளி, இருமலை குணமாக்க தூதுவளை. முகம் அழகுபெற திராட்சை பழம். அஜீரணத்தை போக்கும் புதினா. மஞ்சள் காமாலை விரட்ட கீழாநெல்லி. சிறுநீரக கற்களை தூள்தூளாக ஆக்க வாழைத்தன்டு.