சுட்டெரிக்கும் வெயிலால் ஏற்படும் உடல் சூட்டை தணிக்க நீர்மோரை இந்த மாதிரி செய்து சாப்பிடுங்க…

வெயில் காலம் இந்த மாதமே ஆரம்பித்துவிட்டது. இது பிப்ரவரி மாதம் போல் தெரியவில்லை. அவ்ளோ வெயில் அடிக்கிறது. ஏற்கனவே அரசு தரப்பிலும் மதியம் 12 மணி முதல் மூன்று மணி வரை வெளியே செல்ல…

buttermilk

வெயில் காலம் இந்த மாதமே ஆரம்பித்துவிட்டது. இது பிப்ரவரி மாதம் போல் தெரியவில்லை. அவ்ளோ வெயில் அடிக்கிறது. ஏற்கனவே அரசு தரப்பிலும் மதியம் 12 மணி முதல் மூன்று மணி வரை வெளியே செல்ல வேண்டாம் என்று அறிவித்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு வெப்பம் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இந்த வெப்பத்தை தணிப்பதற்கு மக்கள் குளிர்பானங்களை தவிர்த்து விட்டு இயற்கையான பானங்களான இளநீர், நுங்கு, பதநீர், மோர் போன்றவற்றை அருந்தலாம். அதிலும் நீர்மோரை நாம் வீட்டிலேயே இந்த முறையில் தயார் செய்து குடித்தால் உடல் சூட்டை தணிப்பதோடு நம் உடலுக்கு பலவித நன்மைகளை தருகிறது.

அது என்னவென்றால் நீர் மோரில் நெல்லிக்காய் ஜூஸை சேர்த்து குடிக்கும் போது அது பல ஊட்டச்சத்துக்களை நமக்கு தருகிறது. பொதுவாக நெல்லிக்காய் ஜூஸ் என்பது உடலுக்கு பயனுள்ளதாகவும் சருமத்தை பளபளப்பாக்குவதும் முடி வளர்வதை வேகப்படுத்தும் தன்மை கொண்டதாக இருக்கிறது. ஆனால் நெல்லிக்காய் ஜூஸ் என்பது அனைவருக்கும் பிடிக்காது.

ஏனென்றால் அது துவர்ப்பாக இருப்பதால் பலர் இந்த நெல்லிக்காய் ஜூஸை குடிப்பதற்கு கஷ்டப்படுவர். ஆனால் நாம் வீட்டில் நீர்மோர் தயார் செய்யும் போது அதில் நெல்லிக்காய் மற்றும் நான்கு கருவேப்பிலை இலைகளை சேர்த்து அரைத்து நீர்மோருடன் அந்த நெல்லிக்காய் ஜூஸை கலந்து குடிக்கும் போது அது வித்தியாசமான ருசியில் குடிப்பதற்கு அட்டகாசமாக இருக்கும்.

கருவேப்பிலையின் ருசி, நெல்லிக்காயின் மணம் மற்றும் சிறிய துவர்ப்பு மற்றும் மோரின் ருசி என அனைத்தும் சேர்ந்து அருந்த நன்றாக இருக்கும். நம் உடலுக்கு உடனடியாக புத்துணர்ச்சியையும் தரும். நீங்கள் இதுவரை இது போல் தயார் செய்து குடிக்கவில்லை என்றால் உடனே செய்து குடித்து பாருங்கள். இதனால் பலவித நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கும் சூட்டையும் உடனே தணித்து விடும்.