இன்றைய காலகட்டத்தில் மரணங்கள் அதிகமாக ஏற்படுகிறது. அன்றாடம் நாம் செய்திகளை பார்க்கும்போது நன்றாக இருப்பவர்கள் திடீர் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விடுவார்கள். அதற்கு காரணம் நம்முடைய முறையற்ற வாழ்க்கை முறை தான். ஒரு சில பழக்கங்களால் மாரடைப்பு அதிகமாக ஏற்படுகிறது என்று ஆய்வில் கண்டுபிடித்து இருக்கிறார்கள். அது என்ன என்பதை பற்றி இனி காண்போம்.
மாரடைப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணம் துரித உணவுகளை அதிகமாக சாப்பிடுவது. அதுமட்டுமல்லாமல் இரவு நேரங்களில் நேரம் கழித்து பரோட்டா பிரியாணி போன்றவற்றை சாப்பிடும் போது அது நம் கல்லீரலை வெகுவாக பாதிக்கிறது. அது மட்டும் இல்லாமல் இன்றைய காலத்து இளைஞர்கள் சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வதை விரும்புவதில்லை. பீசா பர்கர் போன்றவற்றை தான் சாப்பிட விரும்புகிறார்கள். இது விரைவில் மாரடைப்பு ஏற்படுவதை தூண்டுகிறது.
சிறுதானியங்கள், பச்சை காய்கறிகள், கீரைகள் போன்றவற்றை அன்றாடம் நம்முடைய உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு பெரும்பாலான மக்களுக்கு இல்லை. ஏதோ நாக்கு ருசிக்காக சாப்பிடுகிறோம் என்று ஆரோக்கியமற்ற சுகாதாரமற்ற உணவுகளை கடைகளில் வாங்கி சாப்பிடுவதும் மாரடைப்புக்கு வழி வகுப்பதாக கூறப்படுகிறது.
மேலும் நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களின் வாழ்க்கை முறையானது ஒரு முன்னுதாரணம். அவர்கள் காலத்தில் இந்த பெரிய நோய் எதுவுமே வந்தது கிடையாது. இன்றைய காலகட்டத்தில் அவர்களது வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். அப்படி இருந்தால் மட்டுமே வரும் தலைமுறையினரை ஆரோக்கியமான தலைமுறையினராக மாற்ற முடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதனால் இது போன்ற பழக்கங்கள் உங்களுக்கு இருந்தால் நிச்சயம் அதை மாற்றிக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறுங்கள்.