இன்றைய காலகட்டத்தில் 40 வயதைத்தாண்டினாலே பலருக்கும் மலச்சிக்கல் வந்துவிடுகிறது. குடல் சுத்தம் இல்லாததுதான் இதற்குக் காரணம். தினமும் எழுந்ததும் டீ, காபி குடிப்பதை நிறுத்திவிட்டு வெண்பூசணி காயில் ஜூஸ் செய்து பருகினால் குடல் முழுமையாக சுத்தமாகும். வெண்பூசணியில் நார்ச்சத்து, நீர்ச்சத்து, கலோரி, இரும்பு, மெக்னீசியம், வைட்டமின் பி மற்றும் சி இருக்கிறது.
வெண்பூசணியில் இருக்கின்ற நார்சத்துக்கள் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்கிறது. குடல் இயக்கம் மற்றும் செரிமான இயக்கம் சீராக நடைபெற வெண்பூசணி சாறு தயாரித்து பருகலாம். பூசணி ஜூஸ் பருகினால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.சுவாசம் சம்பந்தபட்ட பாதிப்புகள் முழுமையாக குணமாக வெண்பூசணி சாறு செய்து பருகலாம்.
ஆஸ்துமா பிரச்சனையை சரி செய்யும் மருந்து இது. உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்க வெண்பூசணி சாறு பருகலாம். வயிறு சம்பந்தபட்ட பிரச்சனைகள் அனைத்தையும் குணப்படுத்தும்.
தேவையான பொருட்கள்:
வெண்பூசணி துண்டுகள் – கால் கப்(தோல் நீக்கப்பட்டது)
தண்ணீர் – ஒரு கப்
தயாரிக்கும் முறை: முதலில் ஒரு கீற்று வெண்பூசணியை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு இதனை மிக்சர் ஜாரில் ஒன்றில் போட்டுக் கொள்ளுங்கள்.அதன் பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.
இந்த வெண்பூசணி ஜூஸை கிளாஸிற்கு வடிகட்டி காலை வேளையில் பருகி வந்தால் குடலில் தேங்கி இருக்கும் கழிவுகள் வெளியேறும். இந்த வெண்பூசணி துண்டுகளுடன் உப்பு, மிளகுத் தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பருகலாம்.