செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்குமா? அப்படின்னா எப்படி சாப்பிடுறது?

பொதுவாக வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும்னு சொல்வாங்க. ஆனா அதுல தான் ஏகப்பட்ட சத்துன்னும் சொல்றாங்க. அப்படின்னா எதை நாம எடுத்துக்கறது? அந்த வகையில் செவ்வாழைப்பழம் சாப்பிடும்போது நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்குது? அதை…

பொதுவாக வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும்னு சொல்வாங்க. ஆனா அதுல தான் ஏகப்பட்ட சத்துன்னும் சொல்றாங்க. அப்படின்னா எதை நாம எடுத்துக்கறது? அந்த வகையில் செவ்வாழைப்பழம் சாப்பிடும்போது நமக்கு என்னென்ன பலன்கள் கிடைக்குது? அதை எப்படி சாப்பிடுவதுன்னு பார்ப்போம்.

வாழைப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் நிறைந்திருக்கிறது. அதனால் இது சளி மற்றும் பருவ கால தொற்றுக்களைச் சரிசெய்யும். இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தையும் குறைக்கும்.

வாழை பழங்களிலேயே மிக சிறப்பு வாய்ந்த பழம் இந்த செவ்வாழை. இதில் அதிக அளவு உயிர் சத்து, வைட்டமின் சி, இரும்பு சத்து, நார்சத்து, பொட்டாசியம், பீட்டா கரோட்டின் என எண்ணற்ற உடலுக்கு தேவையான அணைத்து சத்துக்களும் உள்ளன.

இப்பழத்தை சரியான நேரத்தில் சாப்பிட்டால் இதில் உள்ள சத்துக்கள் அனைத்தும் உடலுக்கு கிடைக்கும். இதனை சாப்பிட சரியான நேரம் காலை 6 மணி, அல்லது காலை உணவு பிறகு 11 மணி, மற்றும் மாலை 4 மணி அளவில் சாப்பிடலாம்.

சளி பிடிக்கும் போது சூடான சாதத்தில் வாழைப்பழத்தை சேர்த்து நன்றாக பிசைந்து சாப்பிட சொல்வார்கள். சளி இருக்கும் போது இயல்பாகவே உடலில் சோர்வு அறிகுறி இருக்கும். அசெளகரியமாக இருக்கும்.

அதை சரி செய்யும் தன்மை இந்த பழத்துக்கு உண்டு. பூவன் பழத்தை சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுத்து ஆற்றலை கொடுக்கும் பொதுவாக செவ்வாழை பழம் சளி ஏற்படுத்தாது, ஆனால் சிலருக்கு அதன் குளிர்ச்சியால் சளி பிடிக்கும் என்றால் இரவு நேரங்களில் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.