கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்த சோகை…! என்னென்ன ஆபத்துக்கள்? தீர்வு என்ன???

By Sowmiya

Published:

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளுக்கு பலவிதமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது உண்டு. தாய் மற்றும் சேய் இருவரின் நலன் கருதி மருத்துவர் பல வகையான பரிசோதனைகளை பரிந்துரைப்பார். அப்படி மேற்கொள்ளப்படும் சோதனைகளுள் ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை கண்டறியும் சோதனை மிக முக்கியமான பரிசோதனை ஆகும்.

anemia pregnancy 1

இரத்த சிவப்பு அணுக்கள் தான் நம் உடலில் உள்ள அனைத்து திசுக்களுக்கும் குழந்தைக்கும் தேவையான ஆக்ஸிஜனை கொண்டு சேர்க்கிறது. ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறையும் பொழுது ரத்த சோகை ஏற்படுகிறது. பொதுவாகவே கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்தம் அதிக அளவு தேவைப்படும் அதிக அளவு சுரக்க வேண்டிய ரத்தம் குறைவாகும் பொழுது இரத்த சோகை ஏற்பட்டு பல சிக்கல்களை உண்டாக்கலாம்.

இரத்த சோகையின் வகைகள்:

anemia pregnancy 3

  • இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் ரத்த சோகை.
  • போலிக் அமில பற்றாக்குறையால் உண்டாகும் ரத்த சோகை.
  • வைட்டமின் பி12 குறைபாட்டால் உண்டாகும் இரத்த சோகை.
இரத்த சோகை எதனால் உண்டாகிறது:

அடுத்தடுத்து குறைவான இடைவெளியில் கருத்தரிக்கும் பொழுது பெண்களுக்கு உடலில் போதுமான அளவு சத்துக்கள் இல்லாமல் ரத்த சோகை உண்டாகலாம்.

குறைந்த வயதிலேயே கருத்தரிக்கும் பெண்களுக்கு இரத்த சோகை ஏற்பட வாய்ப்பு உண்டு.

கர்ப்ப காலத்தில் உணவு பொருட்களில் போதுமான அளவு இரும்பு சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் ரத்த சோகை உண்டாகும்.

காலை நேர உபாதைகளால் அடிக்கடி வாந்தி எடுக்க கூடிய பெண்களுக்கு இரத்த சோகை ஏற்படலாம்.

கர்ப்ப காலத்தில் மசக்கை என்று சொல்லக் கூடிய காலை நேர உபாதைகள்… காரணங்கள் மற்றும் குறைக்கும் வழிமுறைகள்!

கருத்தரிக்கும் முன்பிருந்தே இரத்த சோகை இருந்தால் அது கர்ப்ப காலத்தில் தொடரலாம்.

இரத்த சோகை அறிகுறிகள்:

anemia pregnancy 4

  • உதடுகள் நகங்கள் முகம் வெளிறி போய் இருத்தல்.
  • அதிகமான உடல் சோர்வு காணப்படுதல்.
  • தலைசுற்றல் ஏற்படுதல்.
  • மூச்சு விடுவதில் சிரமம் இருப்பது போல் தோன்றுதல்.
  • இதயம் வேகமாக துடித்தல்.
இரத்த சோகை ஆபத்துக்கள்:

பிரசவ காலத்திற்கு முன்பாகவே குழந்தை பிறத்தல் அல்லது குறைந்த எடையுடன் குழந்தை பிறத்தல்.

பிரசவத்தின் போது ரத்தப்போக்கு ஏற்படுவதால் ரத்தம் ஏற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.

குழந்தைக்கும் ரத்த சோகை வர வாய்ப்புண்டு.

குழந்தையின் வளர்ச்சியில் தாமதம் ஏற்படலாம்.

anemia pregnancy 2
 
இரத்த சோகை ஏற்படாமல் இருக்க தீர்வு:
  • இறைச்சி, முட்டை, பால் சம்பந்தப்பட்ட பொருட்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • போலிக் ஆசிட் அதிகம் உள்ள கீரைகளை தினமும் உணவில் சேர்க்கவும்.
  • இரும்புச்சத்து நிறைந்த பேரிச்சம்பழம் மற்றும் சிறுதானியங்கள், பயறு வகைகள் சேர்த்துக் கொள்ளவும்.
  • நட்ஸ்களை தவறாமல் எடுத்துக் கொள்ளவும்.
  • மருத்துவரின் பரிந்துரையின் படி இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலம் நிறைந்த மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம்.

இரும்புச்சத்து குறைபாட்டுக்கு ஒரே நிரந்தர தீர்வு நல்ல ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்த உணவு பழக்க வழக்கம் தான். உணவின் மூலம் இரும்புச் சத்தை சரி செய்யா விட்டால் நரம்பின் வழியே இரும்புச்சத்து ஊசிகள் ஏற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். கூடுமானவரை உணவின் மூலம் சரி செய்து கொண்டால் நல்லது.