கர்ப்ப காலத்தில் மசக்கை என்று சொல்லக் கூடிய காலை நேர உபாதைகள்… காரணங்கள் மற்றும் குறைக்கும் வழிமுறைகள்!

கர்ப்ப காலத்தில் உடல் சோர்வு, வாந்தி, மயக்கம் போன்றவை 70 சதவிகித பெண்களுக்கு ஏற்படுகிறது. மார்னிங் சிக்னஸ் என்ற சொல்லக்கூடிய காலை நேர உபாதைகளான இந்த மசக்கை கர்ப்பம் தரித்த ஆறாவது வாரத்தில் இருந்து முதல் மூன்று மாதங்கள் வரை பெரும்பாலானோருக்கு இருக்கக்கூடிய ஒன்று.

இவற்றை காலை நேர உபாதை என்று சொன்னாலும் ஒரு நாளில் எப்பொழுது வேண்டுமானாலும் ஏற்படலாம். சிலருக்கு பிரசவ காலம் வரையிலும் இது நீடிப்பது உண்டு. இந்த மசக்கையினால் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஏதேனும் ஆபத்தா? இது எதனால் ஏற்படுகிறது என்பதை பார்க்கலாம்.

vomit

வாந்தி, மயக்கம் உண்டாவதற்கான காரணங்கள்:
  • HCG அல்லது ஈஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் கர்ப்ப காலத்தில் அதிகரித்தல்.
  • ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைதல்.
  • உயர்ந்த அல்லது குறைந்த ரத்த அழுத்தம்.
  • மெட்டபாலிசத்தில் ஏற்படும் மாறுபாடு.

உடல் சோர்வு, வாந்தி, மயக்கம் ஆனது மன அழுத்தம் அல்லது பதட்டம் ஏற்பட்டாலோ இல்லை ஏதேனும் குறிப்பிட்ட உணவுப் பொருட்களை நுகர்ந்தாலோ, மலச்சிக்கல் ஏற்பட்டாலோ, அல்லது வெப்பமான வானிலையின் காரணமாகவோ மோசமடையலாம்.

ஒரு நாளைக்கு ஒரு முறை அல்லது சில நிமிடங்கள் மயக்கம் மற்றும் இரண்டு முறை வாந்தி போன்றவை இருந்தால் பிரச்சனை இல்லை ஆனால் நீண்ட நேரம் அல்லது அடிக்கடி மயக்கம் ஏற்படுதல் நான்கு முறைக்கு மேல் வாந்தி எடுத்தல் போன்றவை இருந்தால் அவசியம் கவனிக்க வேண்டும்.

pregnancy

வாந்தி மற்றும் மயக்கம் ஏற்படும் நிலை கடுமை அடைவதற்கான அறிகுறிகள்:
  • ஒரு நாளைக்கு நான்கு முறைக்கு மேல் வாந்தி எடுத்தல்.
  • உடலில் கடுமையான நீர் இழப்பு ஏற்படுதல்.
  • சிறுநீர் வெளியேற்றத்தில் பிரச்சனை ஏற்படுதல் அல்லது அடர் மஞ்சள் நிறத்தில் வெளியாதல்.
  • நிற்பதற்கு கூட உடலில் வலிமையற்று இருப்பதை போல் உணர்தல்.
  • உடல் எடை நான்கு கிலோவிற்கு மேல் எடை இழப்பு ஏற்படுதல்.
  • கடுமையான வாந்தி மற்றும் மயக்கம் ஏற்படுபவருக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு IV மூலம் நீரேற்றம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும்.
கர்ப்பகால வாந்தி மற்றும் மயக்கத்தை குறைக்கும் வழிமுறைகள்:

காலையில் வெறும் வயிற்றில் இல்லாமல் இரண்டு உப்பிட்ட அல்லது டோஸ்ட் செய்த ரொட்டி துண்டுகளை எடுத்துக் கொள்ளலாம்.

மூன்று வேளை முழு சாப்பாட்டை எடுத்துக் கொள்வதற்கு பதிலாக உணவை சிறிய அளவில் பிரித்து ஆறு அல்லது ஏழு வேளைகளாக எடுத்துக் கொள்ளலாம்.

காரமான கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்த்து விட்டு. மென்மையான நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம். வாழைப்பழம், முட்டை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சிற்றுண்டியாக சேர்த்துக் கொள்ள வேண்டும். பழங்கள், நட்ஸ், தயிர், தானியங்கள் போன்றவற்றை உங்கள் சிற்றுண்டி பட்டியலில் சேர்த்து விடுங்கள்.

நிறைய தண்ணீர் பருகுங்கள். திரவ உணவுகள் நிறைய சேர்த்துக் கொள்வது நல்லது.

tired

வெறும் வயிற்றில் தான் அதிக அளவு தொல்லைகள் ஏற்படும் எனவே வீட்டை விட்டு வெளியே சென்றாலும் எப்பொழுதும் ஏதேனும் சிற்றுண்டிகளை கையில் வைத்துக் கொள்ளுங்கள்.

வாந்தியை கட்டுப்படுத்தும் விட்டமின் மாத்திரைகள் உண்டு. இதனை மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளுங்கள்.

உடலுக்கு நிறைய ஓய்வு அவசியம். கிடைக்கும் நேரங்களில் எல்லாம் போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள்.

கஃபைன் நிறைந்த உணவுகளை தவிர்த்து விட்டு இஞ்சி டீ போன்றவற்றை முயற்சி செய்து பாருங்கள்.

அறையை எப்பொழுதும் காற்றோட்டமாக வைத்துக் கொள்ளுங்கள் கூடுமானவரை வெளியில் சென்று புத்துணர்ச்சி நிறைந்த தூய வெளிக் கற்றை சுவாசிங்கள்.

உணவு உண்டபின் உடனடியாக எப்பொழுதும் படுக்கக் கூடாது. காலாற நடந்த பிறகு படுக்கலாம்.

எலுமிச்சம் பழம் புதினா ஆரஞ்சு போன்ற பொருட்களை அவ்வபோது நுகர்ந்து பார்த்தால் வயிறு பிரட்டல் ஏற்படுவது குறையும்.

morning sickness

மசக்கை குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுத்துமா?

குழந்தை உங்கள் கருவறையில் பத்திரமாக இருக்கிறார்கள் நீங்கள் வாந்தி எடுப்பதனால் குழந்தைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. ஆனால் கடுமையான நீர் இழப்பு மற்றும் உடல் எடை இழப்பு ஏற்பட்டால் குழந்தைக்கு போதுமான அளவு ஊட்டச்சத்து இல்லாமல் குழந்தையின் உடல் எடையும் பாதிக்க கூடிய வாய்ப்பு உண்டு.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews