வேப்பம் பூவின் மருத்துவ குணங்கள் இவைகள்தான்!!

By Staff

Published:

fa004bd295f5acabd7ed577bb0280ecf

வேப்பம்பூ கசக்கும் தன்மை கொண்டதாக இருக்கும் என்று எண்ணி பலரும் அதனை சாப்பிடுவதில்லை. ஆனால் இதன் மருத்துவ குணங்கள் தெரிந்த யாரும் இதனை எப்படியும் சாப்பிட வேண்டும்  என்று நினைப்பர்.

வேப்பம்பூவினைப் பொறுத்தவரை வேப்பம் பூ பொரியல், வேப்பம்பூ ரசம், வேப்பம் பூ குழம்பு எனப் பலரும் சமைத்து சாப்பிடுவர். இது கசக்கும் என்பதால் இதனுடன் பனை வெல்லம்  அல்லது நாட்டுச் சர்க்கரை சேர்த்து சமைக்கச் செய்வர்.

மேலும் வேப்பம் பூவானது, தோல் சம்பந்தப்படட் பிரச்சினைகளான அரிப்பு, தோல் வறட்சி, தோலில் ஏற்படும் புண்கள் போன்றவற்றினைப் போக்க உதவுகிறது. மேகும் இது செரிமானப் பிரச்சினைகளான வயிற்றுப் பொருமல், வாயுத்தொல்லை, வாந்தி, ஏப்பம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், பசியின்மை வயிற்றுப்பிரட்டல், வயிற்றுக் கோளாறு போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வாக உள்ளது.

மேலும் இது குழந்தைகளின் குடலில் உள்ள புழுக்களை நீக்கும் தன்மை கொண்டதாக உள்ளது. மேலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினைக் கட்டுக்குள் வைக்கிறது.

 குழந்தைகள் பொரியலாகவோ அல்லது ரசமாகவோ கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள், அதனால் வேப்பம் பூவினை நாட்டுச் சர்க்கரை கலந்து கஷாயமாக கொடுத்து வரவும்.

Leave a Comment