கரிசலாங்கண்ணியில் உள்ள மருத்துவ குணங்கள்!!

By Staff

Published:

d11fc83b981d13c85af9899db196f1a4

கரிசலாங்கண்ணிக் கீரையானது ஒரு கட்டு ரூ.10 என்ற அளவிலேயே விற்பனையாகி வருகின்றது, இந்த மலிவான கரிசலாங்கண்ணிக் கீரையின் மகத்துவம் குறித்துப் பார்க்கலாம் வாங்க. கரிசலாங்கண்ணி நீரிழிவைக் கட்டுக்குள் வைக்கும் தன்மை கொண்டுள்ளது.

மேலும் இரத்த சோகைப் பிரச்சினை உள்ளவர்கள் கரிசலாங்கண்ணியைப் பொரியலாகவோ அல்லது கடைந்தோ வாரத்தில் 2 முறை என்ற அளவில் சாப்பிடுதல் வேண்டும், நிச்சயம் இரும்புச் சத்து அதிகரிக்கும்.

கர்ப்பிணிப் பெண்கள் கரிசலாங்கண்ணியினை எடுத்துக் கொண்டால் இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையானது அதிகரிக்கும். இதனால் இரத்த சோகைப் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் இரத்த விருத்தி ஏற்படும்.

மேலும் நீர் காரணமாக உடல் எடை அதிகமாக உள்ளவர்கள் கரிசலாங்கண்ணியினை எடுத்துக் கொண்டால், உடலில் உள்ள தேவையற்ற நீர் வெளியேறும், மேலும் உடல் சூடு கொண்டவர்கள் கரிசலாங்கண்ணியினை எடுத்துக் கொண்டால் உடல் குளிர்ச்சி பெறும்.

மேலும் செரிமானப் பிரச்சினைகளில் முக்கிய பிரச்சினையான மலச்சிக்கல் பிரச்சினைக்கு கரிசலாங்கண்ணி சிறந்த தீர்வாக உள்ளது, மேலும் இது மஞ்சள் காமாலைக்கு சிறந்த தீர்வாகவும் உள்ளது.

மேலும் ஆஸ்துமா, சளி, இருமல் தொல்லை இருப்பவர்கள் கரிசலாங்கண்ணியினை கட்டாயம் உணவில் எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.

Leave a Comment