ஒரு வீட்டில் கணவன் மனைவி இருவரிடையே பல்வேறு காரணங்களால் பிரச்சினைகள் நிகழலாம். இந்த பிரச்சினைகளுக்கு அவர்களிடையே சரியான புரிதல் இல்லாததும் ஒரு வகை காரணம் எனலாம். ஆனால் இதற்கு மிக முக்கிய காரணம் அவர்களின் ஜாதகத்தில் நிகழும் கிரக நிலைகள் தான்…
இப்படி கிரக நிலைகள் சரியில்லதால் ஏற்படும் பிரச்சினைகளுக்கு சில பரிகாரங்களை செய்தவன் மூலம் இவற்றை தவிர்க்கலாம்.
பரிகாரம் என்னவெனில் நவகிரக சுக்கிரனுக்கு வெள்ளிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்ற வேண்டும். இது முடியவில்லை எனில் இரண்டு சர்பங்கள் இணைந்து காணப்படும் நாகராஜா சிலைக்கு அதே வெள்ளிக்கிழமைகளில் குங்குமம் மற்றும் மஞ்சள், சிகப்பு இட்டு மேலும் அரளிப்பூ மாலை செலுத்தி நெய் தீபம் தொடர்ந்து ஏற்றி வந்தால் கணவன் மனைவி இருவரிடையே கருத்து வேறுபாட்டால் ஏற்படும் பிரச்சினைகள் நீங்கும்.
மேற்கண்ட பரிகாரங்களை தொடர்ந்து நீண்ட நாட்களாக செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இந்த பரிகாரத்தை ஒற்றைப்படை வாரங்களில் செய்து முடித்து கொள்ளலாம். அதாவது 5 வாரம், 7 வாரம் அல்லது 9, 11 வாரங்கள் வரை செய்து பரிகாரத்தை முடித்து கொள்ளலாம். இந்த பரிகாரங்கள் செய்யும் போது கடவுளை முழுமையாக நம்பி வணங்கி செய்வது மிக முக்கியம். அப்பொழுது தான் நாம் எண்ணியது நடக்கும்.