இது பனிக்காலம். காலையில் எழுவதே ரொம்ப கஷ்டமாக இருக்கும். இழுத்துப் போர்த்திக்கொண்டுதான் படுத்திருப்போம். இந்தக் காலத்தில் பெரிய தொல்லை என்னன்னா அடிக்கடி சளி பிடிக்கும். மூக்கு அடைக்கும். தும்மல் வரும். இதுல ஒரு சிலருக்கு தொண்டை கரகரப்பும் வரும். இருமல் வரும்போதும், மூக்கடைப்பின்போதும் நமக்கு மிகவும் எரிச்சலாக இருக்கும். அதே போல ஓயாத தும்மல் நம்மை ரொம்பவே டென்ஷன் ஆக்கும்.
அதிலும் காலை வேளையில் தான் இந்தத் தொந்தரவு அதிகமாக இருக்கும். சிலருக்கு இரவில் படுக்கும்போது ஒரு சைடு மூக்கு அடைக்கும். அதில் இருந்து அவர்கள் மீள்வதற்குள் படாதபாடு படுவார்கள். அப்படி இப்படின்னு மாற்றி மாற்றி புரண்டு புரண்டு படுப்பார்கள். ஆனால் ஒரு பலனும் இருக்காது. சரி. சரி. வந்த விஷயத்தை ஓப்பன் பண்ணுங்க. இதுக்கு என்ன தான் வழின்னு கேட்குறீங்களா? இதோ அந்த மருந்து எப்படி செய்றதுன்னு பாருங்க.
இதற்கு வீட்டில் இருக்கும் எளிய பொருள்களைக் கொண்டே சளிக்கு நேரடி தீர்வு தரும் வெற்றிலை கஷாயம் மருந்தைத் தயார் செய்யலாம். வாங்க பார்க்கலாம்.
செய்முறை:
வெற்றிலை – 2
மிளகு – 20 nos
துளசி இலை – 5
தேன் – 1 தேக்கரண்டி
தண்ணீர் – 1.5 கப்
வெற்றிலை, மிளகு, துளசி இவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து 5 நிமிடம் மிதமான தீயில் வைத்துக் கொள்ளுங்கள். வடிகட்டி, தேன் சேர்த்து சூடாக அருந்துங்கள். சளி, மூக்கடைப்பு, தொண்டை எரிச்சல் – எல்லாத்துக்கும் ஒரே ப்ராக்கெட் இது உங்கள் வீட்டில் கண்டிப்பா இருக்கணும்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


