காரமான உணவுகளை சாப்பிட்டால் மனநலன் பாதிக்குமா…? ஆய்வில் வெளிவந்த புதிய தகவல்…

உலகில் விதவிதமான ரக ரகமான வண்ணமயமான உணவுகள் இருக்கிறது. ஆனால் எல்லா விதமான உணவுகளையும் சூடாக காரமாக சாப்பிடுவதை தான் பெரும்பாலானவர்கள் விரும்புவார்கள். ஆனால் இந்த சூடான காரமான உணவுகளை சாப்பிட்டால் மனநலன் பாதிக்கக்கூடும்…

spicy

உலகில் விதவிதமான ரக ரகமான வண்ணமயமான உணவுகள் இருக்கிறது. ஆனால் எல்லா விதமான உணவுகளையும் சூடாக காரமாக சாப்பிடுவதை தான் பெரும்பாலானவர்கள் விரும்புவார்கள். ஆனால் இந்த சூடான காரமான உணவுகளை சாப்பிட்டால் மனநலன் பாதிக்கக்கூடும் என்ற ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதை பற்றி இனி காண்போம்.

சமீபத்திய ஆய்வு கூறுவது என்னவென்றால் சூடாக காரமான உணவுகளை சாப்பிடும்போது மனநலன் பாதிக்கும் என்பதற்கான அறிவியல் பூர்வ ஆதாரம் இல்லை. ஆனால் இதனால் கட்டாயம் உடல் பாதிப்புகள் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

அதுவும் சூடான காரமான உணவுகளை நீங்கள் அடிக்கடி எடுத்துக் கொள்ளும் போது உங்களுக்கு வயிற்று வலி உணவுக் குழாய்களில் வீக்கம் நெஞ்செரிச்சல் போன்றவைகள் ஏற்படக்கூடும். மேலும் அடிக்கடி சூடான காரமான உணவுகளை சாப்பிடும் போது உங்களுக்கு ஒரு பதட்டம் பரபரப்பு ஏற்படும். இதனால் மனநலன் சற்று பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

எப்போதுமே மிதமான சூட்டில் எந்த ஒரு உணவையும் மெதுவாக மென்று ரசித்து சாப்பிடும் போது தான் அந்த உணவின் ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் உடலுக்கு கிடைக்கும். அதுவே சாப்பிடுவதற்கான சிறந்த வழி என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். எப்போதும் சூடான காரமான உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பதே மிகவும் சிறந்தது ஆகும்.