குழந்தைகள் நம் வீட்டின் கண்கள் நாட்டின் எதிர்காலம் என்றே சொல்லலாம். ஆனால் ஒவ்வொருவரின் வாழ்விலும் குழந்தை வளர்ப்பு என்பது மிகவும் முக்கியமானது. குழந்தைகள் சுட்டித்தனமாக சுறுசுறுப்பாக இருந்தால் தான் நல்ல முறையில் படித்து நல்ல ஒரு இடத்திற்கு வர முடியும். ஒரு சில குழந்தைகள் சோர்வாக இருப்பார்கள். அப்படி உங்கள் வீட்டு குழந்தைகளின் மூளை Sharp ஆகவும் அவர்கள் சுறுசுறுப்பாக இருக்கவும் ஒரு சில உணவுகளை நீங்கள் அன்றாடம் கொடுக்கும் போது அது சாத்தியமாகும். அது என்னவென்று இனி காண்போம்.
குழந்தைகள் மூளை Sharp ஆக வால்நட், பாதாம் போன்றவற்றை கொடுக்க வேண்டும். இதில் ஒமேகா ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது. இது மூளை சுறுசுறுப்புக்கு மிகவும் உதவும். அடுத்ததாக கீரை வகைகள். கீரை வகைகள் குழந்தைகளின் மூளையை சுறுசுறுப்பாக வைக்க ஆன்டி ஆக்சிடன்ட்கள் போலேட் போன்றவை மிகவும் உதவுகிறது.
தினமும் உங்களது குழந்தைகளுக்கு கட்டாயம் ஒரு காய் ஒரு பழம் கொடுங்கள். இது அவர்கள் அன்றாடம் சுறுசுறுப்பாக இயங்குவதற்கு உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும் அது மட்டுமல்லாமல் மூளை விழிப்போடு இருக்கும். அடுத்ததாக நொறுக்கு தீனிகள் சாக்லேட் போன்றவற்றை அவர்களுக்கு தராதீர்கள். இது அவர்கள் மூளையை மந்தமடைய செய்யும்.
பாட்டிலில் கிடைக்கும் ஜூஸுகளை வாங்கிக் கொடுப்பதை விட உங்கள் குழந்தைகளுக்கு வீட்டில் பிரஷ் ஆக பழங்களை வைத்து அரைத்த ஜூஸுகளை கொடுங்கள். இது மட்டுமல்லாமல் பால் தினமும் ஒரு முட்டை போன்ற உணவுகளை அன்றாடம் கொடுக்கும் போது அவர்கள் மூளை சுறுசுறுப்பாக இயங்கும்.