இன்றைய காலகட்டத்தில் அனைவரும் பரபரப்பான வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பணத்துக்காக வேலைக்காக ஓட வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அதனால் உணவு பழக்க வழக்கங்களில் பல மாற்றங்கள் ஏற்படுகிறது. அதில் ஒன்றுதான் நாம் தினமும் சாப்பிடும் சாதத்தை வேகவைத்து வடிக்காமல் குக்கர் மற்றும் Electric Rice குக்கரை பயன்படுத்தி சமைப்பது. ஆனால் இது உடலுக்கு மிகவும் தீங்கானது என்று சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது. அதை பற்றி இனி காண்போம்.
இன்றைய சூழலில் பலர் Electric Rice குக்கரில் சாதம் வைப்பதை விரும்புகிறார்கள். ஏனென்றால் இது மின்சாரத்தில் இயங்கக்கூடியது. நாம் அரிசியை போட்டு வைத்தால் போதும் அதுவாகவே சாதத்தை தயார் செய்து அதுவாகவே off ஆகி கொள்ளும். அதனால் இதை பலர் மக்கள் விரும்புகிறார்கள். ஆனால் Electric Rice குக்கரில் சமைத்த சாதத்தை சாப்பிடுவதால் பல உடல் நலப் பிரச்சினைகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறி வருகிறார்கள்.
Electric Rice குக்கரில் சமைத்த சாதத்தை சாப்பிடும் போது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பது குறைகிறது. மேலும் Electric Rice குக்கரில் பயன்படுத்தப்படும் அலுமினிய பாத்திரம் சமையலுக்கு பாதுகாப்பானது அல்ல. இதில் சமைக்கும்போது பல ஆபத்தான ரசாயனங்கள் வெளியாவதாகவும் அது சாதத்தில் சேருவதால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படுத்துவதாகவும் கூறுகின்றனர்.
Electric Rice குக்கரில் சமைத்து சாப்பிடுபவர்களுக்கு முடக்கு வாதம், கேன்சர் போன்ற அபாயகரமான நோய்கள் வருவதாக கண்டுபிடித்து இருக்கின்றனர். அதனால் முடிந்த வரையில் சாதத்தை Electric Rice குக்கர் மற்றும் குக்கரில் வைப்பதை தவிர்த்து சட்டியில் வேகவைத்து வடித்து சாப்பிடுவதே சிறந்த முறை என்றும் கூறுகின்றனர்.