ஐஸ்கிரீமை விரும்பி சாப்பிடுபவரா நீங்கள்…? அப்போ இந்த விஷயத்தை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…

ஐஸ்கிரீம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பதார்த்தம் ஐஸ்கிரீம் தான். இன்றைய காலகட்டத்தில் என்ன ஒரு விஷேசம் வீட்டில் நடந்தாலும் அதில் சாப்பாடு முடிந்தவுடன்…

ice

ஐஸ்கிரீம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பதார்த்தம் ஐஸ்கிரீம் தான். இன்றைய காலகட்டத்தில் என்ன ஒரு விஷேசம் வீட்டில் நடந்தாலும் அதில் சாப்பாடு முடிந்தவுடன் இறுதியாக ஒரு ஐஸ்கிரீமை வைக்கிறார்கள். ஐஸ்கிரீம் சாப்பிட்டால் தான் அந்த விருந்தே முடிவடையும் என்ற ஒரு எண்ணமும் மக்கள் மனதில் இருக்கிறது. என்னதான் மைண்டு சரியில்லாமல் இருந்தாலும் ஒரு ஐஸ்கிரீமை எடுத்து கையில் கொடுத்தால் யாராக இருந்தாலும் புத்துணர்ச்சி அடைந்து விடுவார்கள். அனைவரும் விரும்பும் ஐஸ்கிரீமினால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன தெரியுமா? அதை பற்றி இனி காண்போம்.

என்னதான் அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு பொருளாக ஐஸ்கிரீம் இருந்தாலும் இது சத்தான ஒரு உணவு கிடையாது. அளவுக்கு அதிகமாக ஒருவர் ஐஸ்கிரீமை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் அவருக்கு விரைவில் மாரடைப்பு ஏற்படக்கூடிய அபாயம் இருக்கிறது என்று ஆய்வில் தகவல் வெளியாகி இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் ஐஸ்கிரீமில் சேர்க்கப்படும் இனிப்பானது நீரழிவு நோயை ஏற்படுகிறது. மற்றும் இதில் இருக்கும் கெட்ட கொழுப்பானது உடல் பருமன் பெண்களுக்கு தைராய்டு மற்றும் மாதவிடாய் பிரச்சனைகளை உருவாக்குகிறது என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

அதனால் இந்த ஐஸ்கிரீமை நீங்கள் விரும்பி சாப்பிடுகிறீர்கள் என்றால் நிச்சயமாக அதை குறைத்துக் கொள்ளுங்கள். என்றாவது ஒருநாள் விருப்பத்திற்கு ஒன்று சாப்பிட்டுக் கொண்டால் போதுமானது. இயற்கை உணவுகளை சாப்பிடுவதற்கே முயற்சி செய்யுங்கள். அப்போதுதான் நாம் நோய் நொடியின்றி நீண்ட ஆயுளுடன் வாழ முடியும்.