இன்றைய காலகட்டத்தில் Fast Food மோகம் மக்களுக்கு அதிகமாக இருக்கிறது. அதனால் பலர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். உடல் பருமன் ஏற்பட்ட பிறகு அதை குறைக்க வேண்டும் என்று Diet ஃபாலோ செய்கிறார்கள். டயட் என்று எடுத்துக் கொண்டாலே மருத்துவர் அறிவுரை இல்லாமலேயே ஒரு சில உணவுகள் பிரதானமாக சாப்பிடுகிறார்கள். அதில் ஒன்றுதான் முட்டை. இது மிகவும் புரதச்சத்து நிறைந்த உணவு மற்றும் டயட்டில் இது மிக முக்கிய பங்கு பெறுகிறது என்று கூறுகிறார்கள்.
ஒரு சிலர் அதிகப்படியாக புரதச்சத்து வேண்டும் என்பதற்காக முட்டை சாப்பிடுவார்கள். மேலும் பாடி பில்டர்ஸ் கூட 5,10 என முட்டை சாப்பிடுவது உண்டு. ஆனால் தற்போது ஒரு புதிய ஆய்வு கூறுவது என்னவென்றால் ஒரு நாளைக்கு இரண்டு முட்டைக்கு மேல் சாப்பிடக்கூடாது அதனால் பல பிரச்சினைகள் ஏற்படலாம் என்று கூறுகிறார்கள். அதை பற்றி இனி காண்போம்.
முட்டையில் வைட்டமின் ஏ டி மற்றும் பி12 நிறைவாக உள்ளது. புரதச்சத்திற்கு முட்டை சரியான உணவாக இருக்கிறது. உடல் எடையை குறைப்பதற்கு முட்டை சாப்பிட விரும்புவார்கள். தினமும் தவறாமல் டயட்டாக முட்டை சாப்பிடுவோர் இரண்டு முட்டைக்கு மேல் கட்டாயம் சாப்பிடவே கூடாது.
நீரழிவு மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்டவராக இருந்தால் ஒரு நாளைக்கு ஒரு முட்டை மட்டுமே சாப்பிட வேண்டும். அதற்கு காரணம் முட்டையின் மஞ்சள் கருவில் அதிக கொழுப்பு நிறைந்திருக்கிறது. ஒரு முட்டையில் 200 மில்லி கிராம் கொழுப்பு இருக்கிறது. ஆனால் மனித உடலுக்கு ஒரு நாளைக்கு 300 மில்லி கிராம் கொழுப்பு போதுமானது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
அதனால் ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகளுக்கும் மேலாக சாப்பிடும் போது கொழுப்பின் அளவு அதிகரித்து இதய பாதிப்பை உண்டாக்கும். ரத்தத்தில் இருக்கும் கொழுப்புகள் கெட்ட கொழுப்பாக மாறி உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும். இதயம் சம்பந்தமான நோய்கள் வரக்கூடும். எனவே முட்டை சாப்பிடும் போது அளவாக சாப்பிட வேண்டும். இரண்டு முட்டைக்கும் மேல் சாப்பிடுவதை தவிர்த்து விடுங்கள். அதிகமாக காய்கறிகளை எடுத்துக் கொள்ளுங்கள் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.