இளம் வயதினரை தாக்கும் பித்தப்பை கல் பிரச்சனை… என்ன காரணம் தடுக்கும் முறைகள் என்னென்ன… முழு விவரங்கள் இதோ…

இன்றைய காலகட்டத்தில் வயது பாரபட்சமில்லாமல் இளம் வயதினருக்கே பலவிதமான புது விதமான நோய்கள் தாக்குகிறது. அதற்கு காரணம் ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கங்கள் தான். எந்த நேரத்தில் எது சாப்பிட வேண்டும்? எது சாப்பிடக்கூடாது…

gall bladder

இன்றைய காலகட்டத்தில் வயது பாரபட்சமில்லாமல் இளம் வயதினருக்கே பலவிதமான புது விதமான நோய்கள் தாக்குகிறது. அதற்கு காரணம் ஆரோக்கியமற்ற உணவு பழக்க வழக்கங்கள் தான். எந்த நேரத்தில் எது சாப்பிட வேண்டும்? எது சாப்பிடக்கூடாது என்ற வரைமுறை இல்லாமல் ஃபாஸ்ட் ஃபுட்டுக்களை ஆரோக்கியமற்ற தரம்மற்ற உணவுகளை சாப்பிடுவதன் விளைவு புதுப்புது நோய்கள் தாக்குவது மற்றும் இள வயது மரணங்கள் ஆகும்.

அதில் இன்றைய காலகட்டத்தில் இளம் வயதினரை அதிகம் தாக்கக்கூடிய நோயாக பித்தப்பை கல் இருக்கிறது. இது எப்படி உருவாகிறது என்றால் பதப்படுத்தப்பட்ட உணவுகள் தரமற்ற எண்ணெயில் பொறித்த உணவுகள் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் இந்த பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் நார்ச்சத்து அதிகம் இல்லாத உணவுகளை நாம் சாப்பிடும் போதும் இந்த பிரச்சனை எழலாம்.

கொழுப்பு நிறைந்த தரமற்ற உணவுகளை சாப்பிடும் போது அதை செரிமானம் செய்வதற்கு நம் பித்தப்பையில் நீர் சுரக்கும். அது அதிகப்படியான வேலையை செய்யும்போது அது கற்களாக மாறக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. குறிப்பாக இரவு நேரத்தில் பிரியாணி பரோட்டா போன்ற அதிக ஹெவியான கலோரிகள் கொண்ட உணவுகளை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இரவு நேரத்தில் எளிதாக செரிக்கக் கூடிய உணவுகளை சாப்பிட்டால் மட்டுமே பித்தப்பைக்கு நல்லது ஆகும்.

நம் உடம்பில் இருக்கும் ஒவ்வொரு உறுப்புகளும் மிக முக்கியமானவை ஆகும். அதில் ஒரு பாகம் செயல்படாமல் போனால் கூட அது பலவித பிரச்சனைகளையும் உடல் உபாதைகளை ஏற்படுத்தும். அதனால் உணவுப் பழக்க வழக்கங்களை தேர்வு செய்து ஆரோக்கியமான வாழ்வை பெறுவதே இன்றைய காலகட்டத்தில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. நீங்களும் ஒரு சில தவறுகளை செய்தால் உடனே மாற்றிக்கொள்ளுங்கள்.