பொழுதுபோக்கு

சினிமா ரசிகர்களுக்கு சர்பிரைஸ்… மீண்டும் இணையும் மகாராஜா கூட்டணி…

விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் பணியாற்றும் பிரபலமான நடிகர், தயாரிப்பாளர் நிகழ்ச்சி தொகுப்பாளர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். ஆரம்பத்தில் பின்னணியில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜய் சேதுபதி 2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார்.

தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரவுடிதான், சேதுபதி, 96 போன்ற பல திரைப்படங்களில் வயதானவர் வயது குறைந்தவர் என வித்தியாசமான கெட்டப்புகளில் நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தார் விஜய் சேதுபதி.

இடைவிடாமல் தொடர்ந்து பல படங்களில் நடித்து குறுகிய காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் விஜய் சேதுபதி. இவரது நடிப்பிற்கு மட்டுமல்லாமல் இவரது சிந்தனையான பேச்சுக்களுக்கும் ரசிகர்கள் ஏராளம் உண்ட. சமீபத்தில் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று சீனாவில் கூட ரிலீஸ் செய்யப்பட்டு வணிக ரீதியாகவும் வசூல் செய்தது.

விஜய் சேதுபதி நடித்து வெற்றி பெற்ற மகாராஜா திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் நித்திலன். தற்போது மீண்டும் விஜய் சேதுபதியும் இயக்குனர் நித்திலனும் இணைந்து மீண்டும் ஒரு பட பண்ண போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இவர்கள் இணைந்து படம் பண்ணினால் கண்டிப்பாக அது நல்ல கதை அம்சம் கொண்ட படமாக தான் இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

Avatar photo
Meena